இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. அதேபோல் உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் வைரஸ் பாதிப்பு இருந்து கொண்டு தான் வருகிறது.தமிழகத்தின் இதன் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கிய வேளையில் பலரும் வீட்டில் இருந்து தங்களின் வேலைகளை தொடர ஆரம்பித்து உள்ளனர் .


இந்நிலையில் அதிகம் பாதிக்க படக்கூடிய துறை திரைத்துறை . ஊரடங்கு காலத்தில் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் முறையிட்டது  தென்னிந்திய திரைப்பட ஊழியர் சங்கம் . தற்பொழுது , 2021 மே 31 வரை படப்பிடிப்பு நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி  இன்று  செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளார். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான அனைத்து படப்பிடிப்பு மற்றும் பிந்தைய தயாரிப்பு மாத இறுதி வரை நிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது .




பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.கே.செல்வமணி, "அரசாங்க வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக அமல்படுத்திய போதிலும், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளின் தொகுப்பிலிருந்து ஏராளமான கொரோனாவால்  பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து நாங்கள் தமிழக அரசிடம் கொடுத்த மனுவை  திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் , திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்பான அனைத்து பணிகளையும் 2021 மே 31 வரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்" என்று கூறினார் .


 ஒரு தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பை  ஒரு உதாரணமாக  அவர் மேற்கோள் காட்டினார், அதில் செட்ஸில் பணிபுரிந்த 35 பேரில் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது . இரண்டாவது அலைகளின் போது கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் மிகவும் மோசமானதாக இருக்கிறது . இந்த நிலை தான் இந்த முடிவை எடுக்க வழிவகுத்தது என்று அவர் மேலும் கூறினார்.
 




பின்னர் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் சங்கத்தில் இருக்கும் தினசரி வேலையாட்களுக்கு முடிந்த உதவியை செய்யுமாறு சகா நடிகர்களிடம் கேட்டு கொண்டார் . கடந்த ஆண்டு பல நடிகர் நடிகைகள் லைட்டமேன்  மற்றும் பலருக்கு தங்களால் இயன்ற உதவியை செய்தார்கள் .இந்தாண்டும் அவர்கள் உதவி செய்தல் ஊழியர்களுக்கு மிக உதவியாக இருக்கும் .மேலும் அரசாங்கம் மக்களுக்கு தரும் 2000 ரூபாய் தருமாறு கோரிக்கைகளை அந்த பேட்டியில்  முன்வைத்தார் .அடுத்த படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற செய்தியை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார் .


படப்பிடிப்பு ரத்து காரணமாக சில சீரியல்கள் ஒளிபரப்பு பாதிக்கப்படலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி திட்டமிட்ட சில திரைப்படங்களும் தாமதமாக வெளியாக வாய்ப்புள்ளது.