தந்தையர் தினம் :


ஜூலை 5, 1908 அன்று அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் நடந்த சுரங்க விபத்தில் 300-க்கும் அதிகமான ஆண்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.


தந்தையர் தினத்தை கொண்டாடிய இந்திய பிரபலங்கள்!


நேற்று (ஜூன் 19 ) தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்திய பிரபலங்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் தந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதில் சில நெகிழ்ச்சியான பதிவினை கீழே தொகுத்துள்ளோம்.


 






 


ரஜினியும் ஐஸ்வர்யாவும் !


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் , நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “ என் இதய துடிப்பு,,,#happyfathersday “ என குறிப்பிட்டுள்ளார்.



சிரஞ்சீவியுடன் ராம் சரண் !:


தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம் சரண், தனது அப்பா சிரஞ்சீவியுடன் தான் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை தந்தையர் தினத்தன்று பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை இதற்கு முன்னாள் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த புகைப்படத்திற்கு அவர் கேப்ஷன் எதுவும் கொடுக்கவில்லை மாறாக சிம்பிளாக ஒரு ஹார்ட் மற்றும் முத்த ஸ்மைலிகளை பறக்க விட்டிருக்கிறார். இந்த டோலிவுட் பிரபலங்களில் உறவு எத்தனை ஆழமானது என நான் சொல்லி தெரிய வேண்டியதில்லையே!







மகேஷ் பாபு !


மகேஷ்பாபு பெரும்பாலான நேரங்களை தனது குடும்பத்துடன்தான் செலவழித்து வருகிறார். குறிப்பாக குழந்தைகள்தான் அவரது உலகம். அவர்களுடன் நேரம் செலவிடுவதுதான் அவரின் பிரதான வேலை என்றால் மிகையில்லை. அதற்கு சான்று அவரது சமூக வலைத்தள போஸ்டுகள்தான். இந்த நிலையில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் பாபுவின் மனைவி நர்மதா  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ என் இதயத்தில் இருக்கும் மனிதரும் ...எங்கள் குழந்தையின் சிறந்த அப்பாவுமான மகேஷ் பாபுவிற்கு தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.







இதே போல நடிகை ராஷ்மிகா மந்தா, பூஜா ஹெக்டே, சிரஞ்சீவி ,மோகன்லால் உள்ளிட்ட பல தென்னிந்திய பிரபலங்களும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.