ஓடிடியில் வெளியான ஹரிஹர வீர மல்லு
பவன் கல்யாண் நடித்து ரூ 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ஹரிஹர வீர மல்லு. பெரும் கால தாமதத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியானது. 17 ஆம் நூற்றாண்டில் முகலாய ஆட்சிகாலத்தில் வாழ்ந்த ஒரு நாயகனை மையமாக வைத்து இப்படம் உருவானது. வெளியான முதல் நாள் தொடங்கி படத்திற்கு எல்லா தரப்பினரும் நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கினர். படுமோசமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், இஸ்லாமிய எதிர்ப்பு வாத கருத்துக்களை இப்படம் வலியுறுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த நிலையில் ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடியில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஹரிஹர வீர மல்லு படத்தை கடுமையாக விமர்சித்தும் ட்ரோல் செய்தும் வருகிறார்கள்.