ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனன், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தான் என்பது பலருக்கும் ஆச்சரியமாக உள்ளது.


சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில்  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம், ‘ஜெயிலர்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. 


இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 900, கேரளாவில் 400, கர்நாடகாவில் 1093 ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் திரையிடப்பட்டுள்ளது.  தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஜெயிலர் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் 4 நாட்களில், ரூ.300 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் நடித்த அனைவரும் பாராட்டைப் பெற்று வரும் நிலையில், சத்தமே இல்லாமல் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்த நடிகை மிர்னா மேனனும் கொண்டாடப்பட்டு வருகிறார். 






படத்தில் கணவனை இழந்த பெண்ணாக அவர் நடித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் கணவர் வசந்த் ரவியிடமே , ‘உங்க பொண்டாட்டிக்கு வாழ்க்கை கொடுக்க பொண்ணு கேட்டு வந்துருக்கேன்’ என மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர். மேலும் மிர்னா மேனன் ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர்.2016 ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி மேனன்.


நடிகர் அபி சரவணனுடன் காதலில் விழுந்து இருவரும் திருமணம் செய்துக் கொள்ளும் வீடியோவும் வெளியானது. ஆனால் திடீரென அவரை பிரிந்த அதிதி மேனன், சில வருடங்கள் வாய்ப்பு இல்லாமல் இருந்தார். பின் மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியான பிக் பிரதர் படத்தில் நடித்திருந்தார். அவரது பெயரும் மிர்னா மேனனாக இந்த காலக்கட்டத்தில் மாறியிருந்தது. இப்போது அவருக்கு ஜெயிலர் மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்துள்ளது. இதனையடுத்து மிர்னா மேனன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.