எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி திரைப்படம் 2001ஆம் ஆண்டு வெளியானது. ஜோதிகா, விவேக், மும்தாஜ், விஜயகுமார் ஆகியோரும் இதில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்போது, 24 ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 25ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு விஜய் நடித்த கில்லி திரைப்படம் உலகளவில் ரீரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதும் ரூ.35 கோடி வரை வசூலித்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமுக்கு மிகப்பெரிய வருமானத்தை அளித்தது. அந்த இன்று 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிரிலீஸ் ஆகியுள்ள குஷி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது .
திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டம்
கர்நாடகாவில் குஷி திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. திரையரங்கில் ரசிகர்கள் பாடல் காடிகளுக்கு நடனமாடி கொண்டாடி மகிழ்ந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது