Oscar 2024: 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கிற்ஸ்டோஃபர் நோலனின், ஓப்பன்ஹெய்மர் 7 விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்கர் 2024 விருதுகள்:
ஆஸ்கர் விருது திரைத்துறையினருக்கு உச்சபட்ச அங்கீகாரமாக கருதப்படுகிறது. அந்த வகையில் 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை போன்றே, ஓப்பய்ஹெய்மர் உள்ளிட்ட சில படங்கள் விருதுகளை வாரிக் குவிக்குத்துள்ளன. அந்த படத்தில் நாயகனாக நடித்த கிலியன் மார்ஃபிக்கு,சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்ட நிலையில், அதிகபட்சமாக் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் 7 விருதுகளை வென்றது.
| பிரிவு | படம் | வென்றவர்கள் |
| சிறந்த படம் | Oppenheimer | எம்மா தாமஸ், கிறிஸ்டோபர் நோலன் (Emma Thomas & christopher nolan) |
| சிறந்த நடிகர் | Oppenheimer | சிலியன் முர்ஃபி (Cillian Murphy) |
| சிறந்த நடிகை | Poor Things | எம்மா ஸ்டோன் (Emma Stone) |
| சிறந்த இயக்குநர் | Oppenheimer | கிறிஸ்டோபர் நோலன் (christopher nolan) |
| சிறந்த இசை | Oppenheimer | லட்விக் கோரன்சன் (Ludwig Goransson) |
| சிறந்த ஒலிப்பதிவு | The Zone of Interest | டர்ன் வில்லர்ஸ் & ஜானி பர்ன் (Tarn Willers, johnnie Burn) |
| சிறந்த துணை நடிகர் | Oppenheimer | ராபர் டவுனி ஜூனியர் (Robert Downey Jr.) |
| சிறந்த துணை நடிகை | The Holdovers | டிவைன் ஜாய் ரண்டால்ஃப் ( Da'Vine Joy Randolph) |
| சிறந்த பாடல் | Barbie | பில்லி எலிஷ், ஃபின்னஸ் ஓ கானெல் (Billie Eilish & Finneas O'Connell) |
| சிறந்த அனிமேஷன் குறும்படம் | War Is Over! Inspired by the Music of John & Yoko | தேவ் மில்லின்ஸ் மற்றும் பிராப் புக்கர் (Dave Millins and Brad Booker ) |
| சிறந்த அனிமேஷன் படம் | The Boy and the Heron | ஹயோ மியாசகி & டோஷியோ சுஷூகி(Hayao Miyazaki & Toshio Suzuki) |
| சிறந்த வெளிநாட்டு படம் | The Zone of Interest | ஜோனாதன் கிளாஸர் (Jonathan Glazer) |
| சிறந்த ஆவண குறும்படம் | The Last Repair Shop | பென் ப்ரவுட்ஃபுட் & கிரிஸ் பௌவர்ஸ் (Ben Proudfoot & Kris Bowers) |
| சிறந்த தழுவல் திரைக்கதை | American Fiction | கார்ட் ஜெஃபர்சன் (Cord Jefferson) |
| சிறந்த ஒப்பனை மற்றும் சிகையலங்காரம் | Poor Things | நாடியா ஸ்டேசி, மார்க் கோலியர், ஜோஸ் வெஸ்டன்(Nadia Stacey, Mark Coulier, Josh Weston) |
| சிறந்த தயாரிப்பு | Poor Things | ஜேம்ஸ் பிரைஸ், ஜோனா ஹீத்(James Price , Shona Heath) |
| சிறந்த ஆடை வடிவமைப்பு | Poor Things | ஹாலி வாடிங்டன் (Holly Waddington) |
| சிறந்த திரைக்கதை | Anatomy of a Fall | ஜஸ்டின் ட்ரைட் & ஆர்தர் ஹராரி (Justine Triet and Arthur Harari) |
| சிறந்த எடிட்டிங் | Oppenheimer | ஜெனிஃபர் லேம் (Jennifer Lame) |
| சிறந்த ஒளிப்பதிவு | Oppenheimer | ஹொய்டெ வான் ஹொய்டெமா (Hoyte van Hoytema) |
| சிறந்த விஷூவல் எஃபெக்ட் | Godzilla Minus One | டகாஷி யமசாகி, கியோகோ ஷிபுயா, மசாகி டகாஹஷி, டட்சுஜி நிஜோமா |
| சிறந்த ஆவணப்படம் ( Feature) | 20 Days in Mariupol | Mstyslav Chernov |
| நேரடி குறும்படம் (ஆக்ஷன்) | The Wonderful Story of Henry Sugar | வெஸ் ஆண்டர்சன் & ஸ்டீவன் ரேல்ஸ் |
எந்த ஒடிடி தளத்தில் ஆஸ்கர் விருது வென்ற படங்களை காணலாம்:
- கிறிஸ்டோஃபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வரும் 21ம் தேதி, இந்தியாவில் ஜியோ சினிமா ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது
- Poor Things திரைப்படம் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் தற்போது ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது
- The Zone of Interest திரைப்படத்தை AppleTV, Prime Video, YouTube Movies ஆகிய தளங்களில் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்
- The Holdovers திரைப்படம் Peacock ஒடிடி தளத்தில் ஸ்ட்ரிமிங் ஆகி வருகிறது
- Barbie திரைப்படம் MAX ஒடிடி தளத்தில் உள்ளது
- American Fiction திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple TV+ ஒடிடியில் கண்டுகளிக்கலாம்
- Anatomy of a Fall திரைப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் Apple TV+ ஒடிடியில் கண்டுகளிக்கலாம்
- Godzilla Minus One தற்போது வரை எந்த ஒடிடி தளத்திலும் வெளியாகவில்லை