ஆண்டவரின் யார் “பெஸ்ட் ஃபேன் பாய் டைரக்டர்” என்ற சண்டையில் லோகேஷ் கனகராஜூக்கு நாயகன் மீண்டும் வரான் என ட்விட்டர் பதிவு மூலம் கவுதம் வாசுதேவ் மேனன் சிக்னல் கொடுத்துள்ளார்.
கமலின் ஃபேன் பாய் யார்?
கமல், கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006ல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கமலுடன், ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உட்பட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். ரசிகற்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால், வேட்டையாடு விளையாடு படத்தை, டிஜிட்டலில் மெருகூட்டப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டது.
மெருக்கூட்டப்பட்ட இந்த படம் ஜூனில் மீண்டும் ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் ரிலீசாகி இருக்கும் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தின் போஸ்டரை டிவிட்டரில் பகிர்ந்த ரசிகர் ஒருவர் ”எனக்கென்னமோ யார் ஆண்டவரின் Best Fan Boy Director என்ற சண்டையில் முதலிடத்தை பிடித்தது கவுதம் வாசுதேவ் மேனன் தான்” என்றும், அதற்காக லோகேஷ் கனகராஜிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பகிர்ந்தார்.
கவுதம்மேனன்தான் பெஸ்ட்:
ரசிகரின் இந்த பதிவுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ”சந்தேகமே வேண்டாம் பெஸ்ட்கவுதம் வாசுதேன் மேனன் சார் தான்” என கூறியுள்ளார். லோகேஷின் இந்த பதிலை ரீட்வீட் செய்த கவுதம் வாசுதேவ் மேனன், ” கமலின் பெஸ்ட் டைரக்டராக நான் இருக்கலாம். ஆனால், நாயகன் மீண்டும் வரான் மூலம் விக்ரம் படத்தை இயக்கியதில் நீங்கள் தான் பெஸ்ட்” என்றும், லோகேஷ் எனக்கு சரியான சேலஞ்ச் தருகிறார் என்றும் பதிவிட்டுள்ளார். இதுமட்டும் இல்லாமல், யார் பெஸ்ட் டைரக்டர் என்ற சண்டையல் சட்டை கிழியாது, அன்பு மட்டுமே இருக்கும்” என்றும் தன்னுடைய பாணியில் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.
இப்படி ரசிகர்கள் ஒரு பக்கம் யாரு பெஸ்ட் டைரக்டர் என சண்டைக்கு மல்லுக்கட்ட, லோகேஷும், கவுதம் வாசுதேவ் மேனனும் டிவிட்டரில் போடும் அன்பு சண்டை மேலும் வைரலாகி உள்ளது. அதேநேரம், லோகேஷ் கனகராஜுக்கு விக்ரமில் வந்த ரோலக்ஸ் தான் தலைவர் என்றும் ரசிகர்கள் பகிர்ந்து ட்விட்டரை பிசியாக வைத்துள்ளனர்.