கொரோனா காலக்கட்டத்தில் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளனர். இந்த லாக்டவுனை சாதாமாக்கி பலரும் தங்கள் ரசிகர்களுடனான உரையாடலை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நடிகை பார்வதி நாயர் ரசிகர் ஒருவரின் முரண்பட்ட கேள்விக்கு பளார் பதில் ஒன்றினை அளித்துள்ளார்.
நடிகை பார்வதி நாயர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவானவர், இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்துவார். இன்ஸ்டாகிரா ம் பக்கத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் கேள்வி பதில் பகுதியை ஆரமித்த அவர், ஒவ்வொருவரின் கேள்விக்கும் பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் “ உங்கள் சைஸ் என்ன?” என கேட்க , அதனை ஸ்கிப் செய்யாமல் துணிச்சலாக பதில் அளித்துள்ளார். அதாவது ஷூ சைஸ் 37” என்றும் , ட்ரஸ் சைஸ் "S" எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிலுக்கு ரசிகர்கள் லைக்ஸை அள்ளி குவித்து வருகின்றனர். முன்னதாக ரசிகர் ஒரு “உங்கள் பெயருக்கு பின்னால் இருப்பது உங்கள் ஜாதியா?” என கேட்க அதற்கு பதில் அளித்த பார்வதி நான் சாதிக்கு முக்கியத்துவம் அளிப்பவள் அல்ல. ஆனா எப்போதுமே நான் “பார்வதி நாயர்தான்” என தெரிவித்திருந்தார். விஜய் டிவியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் சாதிக்கு ஆதரவாக பார்வதி நாயர் குரல் கொடுத்தார் என்பதும் நினைவுகூறத்தக்கது.
பார்வதி நாயர் மலையாளம் , கண்டனம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார், அப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு மவுசை அதிகரித்தது. அதன் பிறகு உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம் , கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களிலும் நடித்தார். தற்பொழுது தமிழில் ஆலம்பனா என்ற படத்தில் பார்வதி நாயர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.