இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பீஸ்ட் நாயகி ‛அரபிக்குத்து’ புகழ் பூஜா ஹெக்டேவை அச்சுறுத்தியதாக, அந்த விமானத்தின் பயணி மீது பூஜா புகார் செய்தார். ட்விட்டரின் தனது மோசமான அனுபவம் குறித்தும், தான் சந்தித்த மோசமான சூழல் குறித்தும் அவர் செய்த பதிவுக்கு உடனே இண்டிகோ நிறுவனம் ரியாக்ட் செய்தது. 




இந்நிலையில் பூஜாவின் பதிவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, பலரும் இண்டிகோ விமானத்தை புறப்பணிப்போம் என்கிற ரீதியிலும் தங்கள் கண்டனத்தை இண்டிகோவிற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு ரசிகர், பீஸ்ட் ஹீரோ வீரராகவனிடம் இந்த தகவலை தெரிவிக்குமாறு கூறி, பீஸ்ட் படத்தில் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய், ரபேல் விமானத்தில் பறக்கும் போட்டோவை டாக் செய்திருந்தார். 






ஹெல்மெட் கூட போடாமல், நாடு விட்டு நாடு போய், தீவிரவாதியை அட்டாக் செய்து, வானிலும் ஏவுகணை விமானங்களை விஜய் அழிக்கும் அந்த காட்சியை, நாடு கடந்து அனைவரும் கடுமையாக விமர்சித்தனர். மீம்ஸ் மழையில் சிக்கிய அந்த காட்சி, தற்போது தான் மீண்டது. இந்நிலையில் , அதே படத்தில் ஹீரோயினாக நடித்த பூஜா ஹெக்டேவுக்கு விமானத்தில் நடந்த சம்பவத்தை கண்டித்து, உடனே இதை படத்தின் ஹீரோ கதாபாத்திரத்தில் வீரராகவனிடம்(விஜய்) கொண்டு சேர்க்குமாறும், அவர் மூலமாக இதற்கு பழிவாங்குமாறு அந்த ரசிகர் கூறியிருப்பது, உண்மையில் ரணகளத்திலும் இந்த கிளுகிளுப்பு தேவையா என்கிற மாதிரி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். 




விமானத்தில் நடந்தது என்ன?


சற்று நேரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே ஒரு பதிவு இட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பூஜா, தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாக இண்டிகோ விமானத்தை டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார். 






 


பிரபல விமான நிலைய ஊழியர் மீது பிரபல நடிகை நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூஜா அடிக்கடி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர், அவர் எங்கு சென்றாலும் அங்கு எடுக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பவர். இந்நிலையில் தான், அவரது பயணத்தில் இண்டிகோ விமான ஊழியரின் அத்துமீறல், அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கிடையில் பூஜா ஹெக்டேவின் பதிவிற்கு அவரது ரசிகர்கள், எதிர்வினை ஆற்றி வருகின்றனர். இண்டிகோ விமான நிறுவனத்தை கடுமையாக சாடி வருகின்றனர். 


இதற்கிடையில் பூஜாவின் புகாருக்கு உடனே ரியாக்ட் செய்திருக்கிறது இண்டிகோ நிறுவனம். புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அந்நிறுவனம் பூஜாவுக்கு பதில் அனுப்பியுள்ளது.