Rashmika Mandanna Fan : ராஷ்மிகாவை காண கூகுள் மேப் உதவியோடு சரக்கு ஆட்டோவில் வந்த ரசிகர்!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடந்து நடிகை ராஷ்மிகாவை காண, கூகுள் மேப் உதவியோடு பல சிரமங்களை சந்தித்து அவரது வீட்டிக்கே வந்துள்ளார் ரசிகர் ஒருவர்.

Continues below advertisement

‛கர்நாடக க்ரஷ்’ என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு , தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார் .  2016 ல் ‘கிரிக் பார்ட்டி’ திரைப்படம் மூலம் சினிமா துறையில் அறிமுகம் ஆனார் , பின்பு கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகியது . சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் .

Continues below advertisement


இந்தியாவின் "தேசிய க்ரஷ்" என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவிற்கு ரசிகர்கள் அதிகம் , இந்நிலையில் தெலங்கானாவை சேர்ந்த ஆகாஷ் திரிபாதி என்பவர் நடிகை ராஷ்மிகாவின் தீவிர ரசிகர். அவரை காண 900 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தார் என்கிற செய்தி தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
 கர்நாடகாவில் உள்ள குடகு பகுதியில் ராஷ்மிகா வசித்து வருகிறார் என்று தெரிந்து ஆகாஷ் திரிபாதி , கூகுள் தேடலைப் பயன்படுத்தி தெலுங்கானாவில் இருந்து மைசூருவிற்கு ரயிலில் வந்து அடைந்தார் . பின்னர் நடிகையின்  சொந்த மாவட்டமான குடகுவில் உள்ள விராஜ்பேட்டைக்கு அருகிலுள்ள முகுலாவிற்கு  சரக்கு ஆட்டோ மூலம் வந்து  சேர்ந்து உள்ளார் .கிட்ட தட்ட 900 கிலோ மீட்டர் பயணம் செய்து ராஷ்மிகாவின் வீடு விலாசத்தை வழி  எங்கிலும் கேட்டு வந்துள்ளார் .


சந்தேகம் அடைந்த மக்கள் போலீஸ் இடம் புகார் செய்து உள்ளனர் .  அந்த நபரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குடகு பகுதியில் ஊரடங்கு அமலில் இருப்பதால், அங்கு செல்ல கூடாது  எனக் கூறியுள்ளனர். மேலும், ராஷ்மிகா படப்பிடிப்பிற்காக  மும்பை சென்றுவிட்டார் என்ற தகவலையும் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் அந்த ரசிகர் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பியுள்ளார்.காலம் காலமாக ரசிகர்கள் நடிகர்களுக்காக பல வித சேட்டைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். கோயில் கட்டுவது போன்ற அன்பை வெளிப்படுத்தும் நிகழ்வுகளையும் பார்த்திருக்கிறோம். தற்பொழுது இருக்கும் ஊரடங்கிலும் எதையும் பொருட்படுத்தாமல் ராஷ்மிகாவை பார்க்க அவரது ரசிகர் வந்தது தான், பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . விரைவில் ராஷ்மிகா இந்த ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா என்று ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கடந்த காலங்களில் இது போன்ற ரசிகர்களின் செயலுக்கு சம்மந்தப்பட்ட நடிகர்களோ, நடிகைகளோ எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். அவரை நேரில் சந்திப்பது, அல்லது தனது சார்பில் யாரையாவது அனுப்பி அவர்களுக்கு நன்றி சொல்வது போன்ற செயல்கள் செய்துள்ளனர் .அந்த வரிசையில் தன்னை சந்திக்க வந்த ரசிகரின் சிரமம் அறிந்து ராஷ்மிகா எதிர்வினையாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் ஒரு புறம் எழுந்திருக்கிறது.  காலங்கள் கடந்தாலும் ரசிகர்கள் குறும்பு மாறவில்லை. காலத்திற்கு ஏற்றார் போல அவர்களின் செயல் தான் மாறுகிறது. மாற்றம் எதுவும் நிகழவில்லை என்பதை தான் இந்த சம்பவம் காட்டுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola