காஜல் அகர்வால் என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலம். தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ஸ்டைல் மற்றும் நடிப்பு மூலம் ஹீரோயினாக உருவெடுத்தார். மிகுந்த நம்பிக்கையுடன் திரையுலகில் அடியெடுத்து வைத்த காஜல் அகர்வால், மிகக் குறுகிய காலத்தில் விஜய், அஜித் என பெரிய ஸ்டார்களுடன் நடித்து குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை பெற்றார். 


இதன்மூலம், பல வெற்றி படங்களை அடுத்தடுத்து இவர் கொடுக்க, தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வர தொடங்கினார். இந்தநிலையில், சமீபத்தில் காஜல் அகர்வால் பொதுவெளியில் கசப்பான அனுபவத்தை சந்தித்தார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 






என்ன நடந்தது..? 


அம்மா ஆனதுக்கு பிறகும் கைநிறைய படங்களில் பிஸியாக இருக்கும் ஹீரோயின் காஜல் அகர்வால், சமீப காலமாக தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் காஜல் அகர்வால், ஒரு தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 






இந்த நிகழ்ச்சிக்காக சிவப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தார். அப்போது தான் காஜலுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நிகழ்ச்சி முடிந்த பிறகா..? நிகழ்ச்சி தொடங்கும்போதா என்று தெரியவில்லை. ரசிகர்கள் முன்னிலையில் காஜல் அகர்வால் வந்தார். அப்போது, அவரை சுற்றி இருந்த ரசிகர்கள் காஜலிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, கூட்டத்தில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், காஜலின் இடுப்பில் கைவைத்து செல்பி எடுக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால் சட்டென தள்ளி நின்று என்ன என்பதுபோல் கைகளால் கேள்வி எழுப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலகி வருகிறது. 


பாலிவுட்டிலும் கலக்கிய காஜல்:  


தென்னிந்திய படங்களில் ஏறுமுகத்தை தொடர்ந்து காஜல் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்து சில படங்களில் நடித்துள்ளாட். இதனால் தேசிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது. அதன்பிறகு, காஜல் அகர்வால் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு திறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜலுக்கு கடந்த ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இதன் மூலம், சில காலம் படங்களில் இருந்து ஓய்வு எடுத்து தாய்மை காலத்தை ரசித்தார். 


அம்மா ஆனதற்கு பிறகு பல நாட்கள் படங்களுக்கு இடைவெளி கொடுத்த காஜல் அகர்வால், கடந்த ஆண்டு தமிழில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து ரீ-எண்ட்ரி கொடுத்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு படம் பெரிதாக ஓடவில்லை. கடந்த ஆண்டு ‘பகவந்த் கேசரி’ மூலம் வந்து வெற்றி நடையை தொடர்ந்தார்.  இதனை தொடர்ந்து 'இந்தியன் 2', 'சத்யபாமா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல். இவை மட்டுமல்ல.. மற்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.