சாய் பல்லவியின் புகைப்படத்தை ரசிகர் ஒருவர் தனது நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ளார். அவருடன் சாய் பல்லவி இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  


 






பிரேமம் படம் மூலமாக மிகப் பெரிய அளவில் கவனத்தை பெற்ற சாய் பல்லவி, தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2,  என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய, “ என்னை பொருத்தவரை வன்முறை என்பது ஒரு தவறான விஷயம். நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள்.


எனக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதெல்லாம் நான் ஒரு நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்பதுதான்.அதே சமயம் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவது, மாடுகளை கொண்டு செல்லும் இஸ்லாமியரை வழிமறித்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்துவது ஆகிய இரண்டுமே ஒன்றுதான். 






இங்கு வலது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள் இடது சாரி சிந்தனையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் யார் சரி, யார் தவறு எனக்கு தெரியாது. நீங்கள் நல்ல மனிதராக இருக்கும் பட்சத்தில் நீங்கள் யார் சரியாக இருக்கிறார்கள் என்பது குறித்து கவலைப்படத்தேவையில்லை.” என்று பேசியிருந்தார்.


இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் சாய் பல்லவி நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியிருந்தார்.


 






அந்த வீடியோவில், “நான் பேசியது முழுவதுமாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. பலரும் அந்த வீடியோவை முழுவதுமாக கேட்கக்கூட இல்லை. அவரவர்களுக்கு ஏற்ற வகையில் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எல்லா வகையான வன்முறைகளையும் நான் அதில் கண்டித்திருக்கிறேன். மருத்துவம் படித்த பட்டதாரியான எனக்கு, எந்தவிதமான வன்முறையும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.