சம்யுக்தா ஹெக்டே :
கன்னட சினிமாவின் முன்னணி நாயகியும் தமிழில் கோமாளி ,பப்பி , தேள் , மன்மத லீலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அங்கு பரீட்சியமானார். தற்போது பெங்களூருவில் வசித்து வருக் சம்யுக்தா ஹெக்டே , பிரபல கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பலத்த காயங்களுடன் சம்யுக்தா:
கிரீம் படத்தின் ஷூட்டிங் தற்போது பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் நடைப்பெற்றது. அப்போது சண்டைக்காட்சி ஒன்றில் நடிப்பதற்காக சம்யுக்தா தயாராகிக்கொண்டிருக்க , எதிர்பாராத விதமாக தவறி விழுந்துவிட்டார். இதனால் பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக படக்குழுவினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உடனடி சிகிச்சை வழங்கியுள்ளனர். காலில் கட்டுடன் இன்ஸ்டாகிராமில் சம்யுக்தா புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தார். அதில் தனக்கு காலில் உள்ள சவ்வு கிழிந்ததாக குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பேசிய இயக்குநர் அபிஷேக் அவர் சண்டை பயிற்சியில் நடிப்பதற்கான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஒரு பயிற்சியாளரும் உடன் இருந்தனர். ஆனால் ஷார்ட் எடுப்பதற்கு முன்னதாகவே சம்யுக்தா யாரும் எதிர்பாராத விதத்தில் தவறி விழுந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
இரத்த காயம் இல்லை :
சம்யுக்தாவிற்கு அடிப்பட்ட நிலையில் புகைப்படம் ஒன்று வெளியானது அதில் அவ்அர் ஆடை முழுவதும் இரத்த காயங்களுடன் இருக்கிறார். ஆனால் அது உண்மையான இரத்த இல்லை என்றும் அந்த அளவிற்கு அவருக்கு அடிபடவில்லை . படத்தின் ஷார்ட்டை எடுப்பதற்காக போடப்பட்ட மேக்கப் என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.