பிரபல நடிகை பிரியா ஆனந்த் நேற்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரது சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரியா ஆனந்தின் அறிமுகம்
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், முதன்முதலில் புகைப்படம் என்னும் படத்தில் நடித்தார். அப்படம் ரிலீசாக தாமதமானதால் வாமனன் முதலில் வெளியாகி பிரியா ஆனந்துக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து 180, எதிர்நீச்சல், அரிமா நம்பி, இரும்புக்குதிரை, வணக்கம் சென்னை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, முத்துராமலிங்கம், கூட்டத்தில் ஒருவன், எல்.கே.ஜி, ஆதித்ய வர்மா, காசேதான் கடவுளடா ஆகிய படங்கள் தமிழில் நடித்துள்ளார்.
லியோவுக்காக காத்திருப்பு
நடிக்க வந்து 13 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், பிரியா ஆனந்த இளம் நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோக்கள் படங்களில் அவர் நடிக்காதது ரசிகர்களிடையே ஒருவித சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்படியான நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் 67வது படமான ‘லியோ’ படத்தின் அப்டேட் வெளியானது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் நிலையில் பிரியா ஆனந்தும் இடம் பெற்றது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள பிரியா ஆனந்த், லியோ படத்தை மிகப்பெரிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் நீண்ட நாட்களாக ரிலீசாகமல் இருக்கும் அந்தகன், சுமோ படத்தை அவருடன் சேர்ந்து ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர். சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது பதிவுகளை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
குவிந்த பிறந்தநாள் வாழ்த்து
இப்படியான நிலையில் நேற்று (செப்டம்பர் 17) தனது 37வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை பிரியா ஆனந்துக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி பிரியா ஆனந்துக்கு ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் லியோ படத்துக்கு அவருக்கு ரூ.80 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. லியோ படத்துக்கு பிறகு பிரியா ஆனந்தின் கேரியர் வேற லெவலுக்கு செல்லலாம் என்பதால் அவரின் சம்பளமும் அதிகரிக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Ajithkumar: 'அஜித் மாதிரி மருமகன் கிடைச்சது அதிர்ஷ்டம்' - நெகிழ்ச்சி பொங்கி பேசிய ஷாலினியின் தந்தை! - ரசிகர்கள் மகிழ்ச்சி!