நடிகர் பயில்வான் ரங்கநாதனை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை என பாடகி சுசித்ரா நேர்காணல் ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார்.


கடந்தாண்டு பிரபல பின்னணி பாடகி சுசித்ரா போலீஸில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் அளித்தார். தன்னைப் பற்றி அவதூறான கருத்தை பரப்புவதாக தெரிவித்திருந்தார். அதேசமயம் போனில் பயில்வானிடம் சுசித்ரா சண்டை போட்ட ஆடியோவும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே திரையுலகினர் பலர் பற்றியும் பயில்வான் ரங்கநாதன் பல சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருவது தொடர்ந்து பிரச்சினைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 


ஆனால் தன்னிடம் அனைத்துக்கும் ஆதாரமிருப்பதாகவும், தான் கேட்ட விஷயங்களை கூறுவதாகவும் பிரச்சினை ஏற்படும் இடத்தில் எல்லாம் பயில்வான் ரங்கநாதன் விளக்கமளித்து வருகிறார். இதனிடையே பயில்வான் ரங்கநாதன் பற்றி பாடகி சுசித்ரா நேர்காணல் அதிர்ச்சியளிக்கும் வகையில் பல கருத்துகளை தெரிவித்துள்ளார். 


அதில், “பயில்வான் ரங்கநாதன் என்னை பற்றி பேச 2 விஷயங்கள் தான் உள்ளது. ஒன்று அவர் காசு வாங்கியிருக்க வேண்டும், இல்லையென்றால் என்னை பற்றி தெரிந்திருக்க வேண்டும். நான் அந்த மனிதரை என் வாழ்நாளில் பார்த்தது கூட இல்லை. நாம் பின்னணி பாடகியாக இருக்கும்போது அவர் சினிமா துறையில் இருந்துள்ளார். நான் திரையுலகிற்கு வருவதற்கு முன்னால் அவர் ஆபாச படங்களுக்கு நடிகைகளை ஏற்பாடு செய்யக்கூடிய ஏஜெண்ட் ஆக இருந்துள்ளார். மலையாள ஆபாச படங்களின் ஷூட்டிங் சென்னையில் ஒருகாலத்தில் நடைபெற்றது. அப்போது பயில்வான் அந்த வேலை செய்துக் கொண்டிருந்தார். இது நான் பத்திரிக்கையாளராக இருந்த காலக்கட்டத்தில் அனைவரும் அறிந்த விஷயம். 


சென்னையில் ஆபாச படங்களின் ஷூட்டிங்கை நிறுத்தியதே சரத்குமார், ராதாரவி, சத்யராஜ், கங்கை அமரன் அவர்கள் தான். இது சத்தியமாகவே நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கேரளாவில் இருந்து மாற்றாகி தமிழ்நாட்டில் நடந்தது. ஆனால் அது நம்ம ஊருக்கு செட் ஆகாது என சொல்லி அனைத்தையும் நிறுத்தினார்கள். இந்த கலாச்சாரத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததே பயில்வான் ரங்கநாதன் தான். அதனால் பயில்வான் ஒரு “மாமா பையன்”. என்மேல் குற்றச்சாட்டு வைத்ததால் நான் பயில்வான் மீது குறை சொல்லவில்லை. அவர் ஒரு பத்திரிக்கையாளரே இல்லை. விஷால் கூட சமீபத்தில் பயில்வான் ரங்கநாதனிடம் பேச விரும்பவில்லை. அவர் ஒதுக்கப்பட்டவர். பயில்வான் ரங்கநாதன் ஒரு உதவாக்கரை” என கூறியுள்ளார். 




மேலும் படிக்க: Dhanush: ஐஸ்வர்யா நல்ல அம்மாவா?.. தனுஷ் மட்டும் தான் ஏமாற்றுக்காரரா? - பாடகி சுசித்ரா கேள்வி!