கடந்த 1992 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘அண்ணாமலை’ . இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். முதலில் இயக்குநர் வசந்த் அண்ணாமலை படத்தை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் அந்த படத்திலிருந்து விலகினார். அதன் பிறகுதான் சுரேஷ் கிருஷ்ணா அண்ணாமலை திரைப்படத்தை இயக்க முன்வந்தார். அண்ணாமலை படத்தில் பிரபலமான வசனம் ஒன்று உள்ளத். தன்னை அவமதிக்கும் தனது நண்பனிடம் ரஜினிகாந்த் “ அசோக் இந்த நாள் ...உன் டைரியில குறிச்சு வச்சுக்கோ “ என மிக நீண்ட வசனம் பேசுவார். அது இன்றைக்கும் பலரின் ஃபேவெரெட். பலரும் மீம்ஸ்களில் கூட அந்த வசனத்தை பயன்படுத்துவார்கள். இந்நிலையில் அந்த காட்சிகள் உருவான விதம் குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் “ அந்த வசனத்தை நாம சாதாரணமா படிக்கும் பொழுது ஒரு பவர் இருக்கும் . ஆனால் ரஜினி சார் சொல்லும் பொழுது வேறு மாதிரியான பவர் இருக்கும். அவர் ரீல்ஸ்ல டயலாக் படிச்சாரு. அப்போ எனக்கு தோணுச்சு , இதை கட் பண்ணி , கட் பண்ணி எடுத்தா நல்லாயிருக்காது. சிங்கிள் ஷார்ட்ல எடுத்தா நல்லாயிருக்கும்னு தோனுச்சு.நான் கேமரா மேன் கிட்ட பேசிட்டு அது போல பண்ணலாம்னு முடிவு பண்ணேன். அதன் பிறகு ரஜினி சார்க்கிட்ட பேசினேன். ஒரு அரை மணி நேரம் வேணும் சார் அப்படினு கேட்டதும் அவர் அமைதியா ஓரமா உட்கார்ந்துட்டாரு. இப்போ கூட அந்த ஷார்ட்டை பார்த்தீங்கன்னா வழக்கமான ஷார்ட் போல இருக்காது. வித்தியாசமா எடுத்திருந்தோம். அதுக்கான ஏற்பாடுகள் பண்ணும் பொழுது , ரஜினி சார் என்னை கூப்பிட்டு என்ன நடக்கப்போகுதுனு கேட்டாரு. அப்போ நான் சொன்னேன் பர்ஃபார்மென்ஸ் பண்ணக்கூடிய ஷார்ட். ஒயிட் கேமரா வச்சா நல்லாயிருக்காது. ஸ்ண்டாண்டட் கேமரா வேண்டாம் அப்படினு சொன்னேன். அந்த ஷார்ட் எடுக்கும் பொழுது ரஜினி சாருக்கு குளோஸ் ஷார்ட் போகும் பொழுதெல்லாம் , சரத் பாபு அங்கிருந்து ஓடி வருவாரு. நிறைய பாக்ஸ்லாம் மாத்துவோம். அதையெல்லாம் கண்டுக்காம , ஒரே இடத்தை ஃபிக்ஸ் பண்ணி எமோஷ்னலாக டயலாக் பேசினாரு ரஜினிசார். உண்மையிலேயே அவருக்கு நான் தலை வணங்குறேன். சிங்கிள் ஷார்ட்ல , ஒரே டேக்ல அந்த சீன் எடுத்தோம். அவ்வளவு சத்ததிற்கு மத்தியில அவர் அந்த சீன்ல நடிச்சது மிகப்பெரிய விஷயம். தியேட்டர்ல அந்த சீனிற்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்தது . “ என்றார் சுரேஷ் கிருஷ்ணா.