சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர் அந்த நடிகர். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்தார். அதன் பிறகு தான் காலம் அவரை நடிகராக மாற்றியது. ஆரம்பித்த புதிதில் பீக்கில் இருந்த அவர் மிடில் ஸ்டேஜில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தார். இப்போது மீண்டும் அவரது சினிமா வாழ்க்கை சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. இப்படி சென்று கொண்டிருக்கும் போது அவரைப் பற்றிய கிசுகிசு உலா வர தொடங்கியிருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
அந்த நடிகர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. அவருடைய அப்பா தயாரிப்பாளர். அதனால், சினிமாவில் எளிதாக நுழைந்துவிட்டார். ஆனால், ஆரம்பத்தில் ஒரு பிரபல இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்தார். நாளடைவில் காலம் அவரை நடிகராக மாற்றியது. முதல் படத்தை ஹிட் படமாக கொடுத்தார். அதன் பிறகு வரிசையாக ஹிட் படங்களாகவே கொடுத்தார். இதனால், அவரது மார்க்கெட் கூடியது. உச்சத்தில் இருக்கும் போது குடிப்பழக்கத்திற்கு ஆளானார். அதோடு பெண் சகவாசமும் சேர்ந்து கொண்டது. அப்புறம் என்ன சினிமாவில் டவுன் தான். சீனியர் நடிகர்களையும் விமர்சிக்க ஆரம்பித்து அவர்களது கேலி, கிண்டலுக்கு ஆளானார்.
சீனியர் நடிகரின் மகள் மீது காதல் வலையில் விழுந்திருக்கிறார். அப்போது காதலியின் தந்தையிடமும் மோதல் வரவே அவரது காதல் பாதியிலேயே பிச்சுக்கிச்சி. இப்படி ஆளாளுக்கு அந்த நடிகருக்கு எதிராக திரும்பவே இன்னமும் கல்யாணம் நடக்கவில்லையாம். குடியும், பெண் சகவாசமும் தான் அவரது இந்த நிலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அப்போது தான் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த படத்தில் நடித்த நடிகை மீது அவருக்கு காதல் வந்திருக்கிறது. அதுவும் ஒன்சைடு லவ் தான். அதற்காக அந்த நடிகர் மட்டுமின்றி நடிகரின் குடும்பமும் ஒன்று சேர்ந்து அந்த நடிகையை பெண் கேட்டு தூது அனுப்பினர்களாம் பொதுவான ஒரு பிரபலத்தை. தூது சென்றவர் சொன்னதையெல்லாம் கேட்ட நடிகையின் அம்மா கோபத்தின் உச்சத்திற்கு சென்று நடிகரைப் பற்றி பேசாத பேச்சு இல்லையாம். குடிகாரன், பெண் தொடர்பும் உண்டு. அந்த நடிகருக்கா என்னுடைய மகளை கேட்கிறீர்கள், இனிமேல் இப்படியெல்லாம் பேசிக்கிட்டு இங்கு வந்துவிடாதீர்கள் என்று சொல்லி விரட்டியடித்திருக்கிறாங்க. இதனால், அந்த நடிகர் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பிச்சிருக்கிறார்.