Family Movie: டைனோசர்ஸ் பட ஹீரோ உதய் கார்த்திக்கின் அடுத்த படம்: ஃபேமிலி படத்தின் ஷூட்டிங் தொடக்கம்!

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் படத்தில் நடித்த நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார்.

Continues below advertisement

உதய் கார்த்திக் நடிப்பில், இயக்குநர் செல்வா இயக்கத்தில் ‘ஃபேமிலி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே தொடங்கியது. 

Continues below advertisement

யுகே க்ரியேஷன்ஸ் சார்பில் கே.பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில், நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படம் ‘ஃபேமிலி’. இப்படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்கப் போராடுகிறார்கள். அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை  அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக திரைப்படமாக உருவாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் படத்தில் நடித்த நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், ஆர்.ஜே. பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. இப்படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.  ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். கே.பி. நந்து கலை இயக்கம் செய்கிறார். ஆர். சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். பெரும் பொருட்செலவில் UK Creations சார்பில் K பாலாஜி தயாரிக்க, R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.  படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola