அமேசான் ப்ரைமில் ஜூன் 4-இல் வெளியாகிறது ஃபேமிலிமேன் 2 வெப் சீரீஸ். முதல் தொடர் சிறப்பாக அமைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர். இதில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ட்ரெய்லர் வெளியாகி யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தமிழர்களை குறிப்பாக ஈழத்தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சென்னையை காட்டும் போது ஈழத்தமிழ் போராளிகளையும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளையும் ஒப்பிடுவதாகவும் உரிமைக்கான போராட்டத்தை எப்படி அவ்வாறாக ஒப்பிடலாம் எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



 


மற்றொரு இடத்தில் விடுதலைப்புலிகளின் சீருடையை காட்டுகிறார்கள். அதன்மூலம் போராளிகள் என படத்தில் ஈழத்தமிழ் போராளிகளை காட்டி அவர்களை முழுக்க முழுக்க தீவிரவாதிகள் என முத்திரை குத்த இயக்குனர் முயற்சிக்கிறார் என கருத்து முன்வைக்கப்படுகிறது.






இந்நிலையில் #FamilyMan2_against_Tamils 2 என்ற ஹேஷ்டேட் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. அதோடு LTTE போன்றவையும் கூட ட்ரெண்டாகி வருகிறது. இது குறித்து அமேசான் கூறும் போது இந்த வெப் சீரிசில் வரும் அனைத்தும் கற்பனையே என்றும் யாரையும் இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டது அல்லது என்றும் கூறியுள்ளது.