பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் மாமன்னன் திரைப்பட கதாபாத்திரமான ‘ரத்னவேலு’ கவர் புகைப்படத்தை ஃபேஸ்புக்கலிருந்து நீக்கியுள்ளார். 


மாமன்னன் 


மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் திரையரங்குகளில் வெளியானபோது கொண்டாடப்பட்டதை விட ஓ.டி.டி.-யில் வெளியான பிறகு ரசிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டம் ஒன்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எம்.எல்.ஏ. ஆன பிறகும் ஆதிக்க சாதியினரால் ஒடுக்கப்படுவதும், அதை தந்தையும் மகனும் சேர்ந்து எதிர்ப்பதும் கதையாக அமைந்திருந்தது.




 


சாதியை ஆதரிக்கும் மனப்போக்கு


இந்தப் படத்தில் வரும் ரத்னவேலு கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் மிக சிறப்பாக நடித்தார். ஆனால், ரத்னவேலு கதாபாத்திரம் சாதியப் பெருமை அடங்கிய கெளரவத்தை பின்பற்றும், பாதுகாக்கும், அடிமைத்தனத்தை விரும்பும் வில்லன் கதாபாத்திரம். எல்லாரும் சமம்; சாதிய பாகுபடுகள் இன்றி இருக்க வேண்டும் என்பதை வலியிறுத்தியும் ஆதிக்க வர்க்கத்தினரின் வன்முறை மனதையும் அவர்கள் சக மனிதர்கள் மீது கொண்டுள்ள வெறுப்பின் விளைவுகளையும் பேசியிருக்கும் கதை. இப்படியிருக்கையில், ரத்னவேலு பகுதிகள் மட்டும் தனியாக கட் செய்யப்பட்டு, அதில் சாதியை பெருமைப்படுத்தும் பாடல்கள் இணைக்கப்பட்ட வீடியோக்கள் டிவிட்டரில் ட்ரென்ட் ஆகின. 


‘தாமிரபரணி’ படத்தின் ‘கட்டபொம்மன் ஊர் எனக்கு கெட்டவன்னு பேர் எனக்கு’ போன்ற சாதிய பெருமைகளை பேசும் வரிகளை கொண்ட பாடலக்ள் எடிட் செய்யப்பட்டு அந்த வீடியோவை பலரும் பகிர்ந்திருந்தன. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கல்வி அறிவு பெற்ற இளைஞர்களும் சாதிய பெருமை பேசும் வீடியோக்களை பாராட்டி கமெண்ட் செய்தனர். முந்தைய தலைமுறையினர் இப்படி இருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், இளைஞர்களே இப்படி அறிவுகெட்டு சாதிய பெருமைகளை கொண்டாடி வருகிறார்களே என்ற வேதனைகளையும் பலரும் டிவிட்டரில் முன்வைத்தனர். இதில் பலரும் ஃபகத் குறிப்பிட்ட சாதிப் பெயர்களைச் சொல்லி கொண்டாடினர். அதில் அவருடைய மதம் சார்ந்த கருத்துகளையும் பதிவிட்டனர். இப்படி முட்டாளதனமாக கருத்தை உருவாக்கி அதை பகிர்ந்து வந்த இளைஞர்கள் செய்வது வேதனையையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. 


ஃபகத் ஃபாசில் ஃபேஸ்புக் கவர் புகைப்படம்


இதெல்லாம் ஒருபுறம் இருக்க இப்படி பிரச்சனை சமூக வலைதளத்தில் இருக்கும் நிலையில், ஃபகத் ஃபாசில் தனது ஃபேஸ்புக் கவர் புகைப்படத்தை மாற்றினார். அவருடைய போஸ்டிற்கும் சிலர் சாதிய பெருமையுடன் பாராட்டினர். 


இந்நிலையில், ஃபகத் ஃபாசில் ‘ரத்னவேலு’ கதாபாத்திர புகைப்படத்தை நீக்கிவிட்டார்.