தென்னிந்திய திரையுலகின் ஒரு கியூட் நடிகை என்றால் நம் அனைவரின் நினைவிற்கு வருவது நஸ்ரியா நசீம். இவர் தனது திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க பிரேக் எடுத்துக்கொண்டாலும் இன்றும் யாராலும் அவரது சுட்டித்தனமான நடிப்பை மறக்கவே முடியாது.
நடிகை நஸ்ரியா நசீம் - பகத் பாசில் இருவரும் மலையாள திரையுலகின் ஸ்டார் ஜோடிகள். பெங்களூர் நாட்கள் மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இருவரும் ஆகஸ்ட் 2014ம் மணமுடித்துக்கொண்டனர். அன்றை போலவே இன்றும் இவர்கள் இருவரும் கியூட் ஜோடிகள்தான்.
நஸ்ரியா - பகத் பாசில் ஜோடி பக்ரீத் பண்டிகையன்று தங்களது குடும்பத்துடன் புன்னகையோடு எடுத்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது ரசிகர்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். நஸ்ரியா மிகவும் பாரம்பரியமான உடையிலும், பகத் பாசில் ஒரு ஜீன்ஸ் ஷர்ட் அணிந்தும் மிகவும் அழகாக போஸ் கொடுத்து இருந்தனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தென்னிந்திய திரையுலக ஸ்டார்களான மோகன்லால், மகேஷ் பாபு, சிரஞ்சீவி போன்ற பலரும் தங்களது ரசிகர்களுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் சமூகவலைத்தளம் மூலம் தெரிவித்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு பிரேக் எடுத்து கொண்ட நஸ்ரியா நடிகர் நானி ஜோடியாக Ante Sundaraniki என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக வெற்றி பெற்றுள்ளது. அவர் அங்கும் அவரது நடிப்பு திறமையால் பல வெற்றி படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நஸ்ரியா ஒரு புறம் திரையுலகை கலக்கி வருகிறார் என்றால் அவரது கணவர் பகத் பாசில் மறுபுறம் சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறார். உலக நாயகன் நடிப்பில் வெளிவந்து சரியான வசூலை ஈட்டிய விக்ரம் திரைப்படத்தில் பகத் பாசில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்பு திறமையால் ரசிகர் மனதை கொள்ளையடித்து விட்டார். அவர் நடித்த புஷ்பா திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
ALSO READ | Iravin Nizhal Review: படமா இது? அதுக்கும் மேல... உலக பார்வையில் விழும் இரவின் நிழல்!
இந்த பக்ரீத் பண்டிகை நஸ்ரியா - பகத் பாசில் குடும்பத்திற்கு ஓர் நிறைவான பண்டிகையாக அமைந்திருக்கும். இந்த சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை அள்ளி குவித்து பக்ரீத் தின வாழ்த்துக்களையும் வாரி வழங்கி வருகின்றனர்.
இன்று போல் என்றும் இவர்கள் இருவரும் சந்தோஷமாகவும், வெற்றியோடும் வாழ வாழ்த்துக்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்