கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிய ஆவேஷம் மற்றும் வருஷங்களுக்கு சேஷன் ஆகிய இரு மலையாளப் படங்களின் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரத்தைப் பார்க்கலாம்.


ஆவேஷம்


இந்த ஆண்டு வெளியான மலையாளப் படங்கள் அடுத்தடுத்து 100 கோடி வசூலை ஈட்டின. தமிழ் சினிமாவைக் காட்டிலும் மலையாளப் படங்களே இந்த ஆண்டு சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பிரேமலு , மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், அன்வேஷிப்பின் கண்டேதும் ஆகியப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியாகிய ஆவேஷம் படத்திற்கும் தமிழ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது படம் வெளியாகி அமோகமான வரவேற்பைப் பெற்றுள்ளது. ஃபகத் ஃபாசிலின் நடிப்பும் பாடல்களும் திரையரங்கங்குகளில் வைப் மெட்டிரியலாக மாறியுள்ளன. 


ஃபகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேஷம் படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியது. ரோமான்ச்சம் படத்தின் மூலம் பிரலமான ஜிது மாதவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் . மன்சூர் அலிகான் , ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சுஷின் ஷியாம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் கொண்டாடிவரும் ஆவேஷம் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் நிலவரங்களைப் பார்க்கலாம்.


ஆவேஷம் பாக்ஸ் ஆஃபிஸ் (Aavesham Box Office)


ஆவேஷம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.65 கோடி வசூல் செய்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக 3 கோடிகளை வசூல் செய்தது. மொத்தம் இரண்டு நாட்களில் 6.65 கோடி வசூல் செய்துள்ளது ஆடு ஜீவிதம். அடுத்து வரக்கூடிய இரண்டு விடுமுறை நாட்களில் இப்படத்தின் வசூல் இரு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்


வருஷங்களுக்கு சேஷம்






ஆவேஷம் படம் வெளியான அதே நாளில் வெளியான மற்றொரு படம் வருஷங்களுக்கு சேஷம். ஹ்ரிதயம் படத்தின் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் , மற்றும் தியான் ஸ்ரீனிவாசன் , கல்யாணி பிரியதர்ஷன் , ஒய் ஜி மகேந்திரன் , நிவின் பாலி , உள்ளிட்டவர்கள்  நடித்துள்ளார்கள். ஆவேஷம் படத்தைப் போலவே இப்படத்திற்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. 


இப்படம் முதல் நாளில் இந்தியளவில்  3.05 கோடியும் இரண்டாவது  நாளில் 2,50 கோடியும் வசூலித்துள்ளது. மொத்தம் இரண்டு நாட்களில் இப்படம் 5.55 கோடி வசூலித்துள்ளது.