தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிக கவனம் பெறும் ஜோடிகளாக இருப்பவர்கள் நடிகர் ஃபஹத் பாசிலும் நடிகை நஸ்ரியாவும். தம்பதிகளான இருவருக்கும் இருக்கும் ரசிகர் பட்டாளத்தை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. 


ரீ-எண்ட்ரி :


தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வந்தவர் நஸ்ரியா. பீக்கில் இருந்த சமயத்தில்தான்  நடிகர் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா திரைப்படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை. இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலு நஸ்ரியாவுக்கான மவுசு என்றைக்குமே குறைந்ததில்லை. இந்த நிலையில் சமீபத்தில் மலையாள சினிமாவில் நஸ்ரியா ரீ - எண்ட்ரி கொடுத்தார். தற்போது முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார். சமீபத்தில்தான் நஸ்ரியாவின் கணவர் ஃபஹத்தும் புஷ்பா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். 







அண்டே சுந்தராணிகி :


தெலுங்கு முன்னணி நடிகர் நானியுடன் , நஸ்ரியா நடித்த அண்டே சுந்தராணிகி படம் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நஸ்ரியா , ” ஒரே காலக்கட்டத்தில் நானும் ஃபஹத் பாசிலும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானது எதர்ச்சையாக நடந்த ஒன்று.  நாங்கள் மற்ற ஜோடிகளை போல எங்கள் வேலை குறித்து பேசுவோம். ஆனால் அதிகமாக இல்லை. ஏனென்றால் நாங்கள் இருவரும் இணைந்து படங்களை தயாரிக்கின்றோம் . அதனால் ஸ்கிரிப்ட் குறித்து அதிகம் பேசமாட்டோம். ஆனால் தெலுங்கு படங்களுக்காக ஒன்றாக இணைந்து அந்த மொழியை கற்றுக்கொள்கிறோம் “ என்றார்







பஹத்துடன் இணையும் நஸ்ரியா ?


ரியல் லைஃப் ஜோடிகளை ஆன் ஸ்கிரீனில் ஒன்றாக பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் பலருக்கும் ஃபேவெரட்டான ஜோடிகள் என்றால் சொல்லவா வேண்டும். இது குறித்து பேசிய நஸ்ரியா “நாங்க இருவரும் இணைந்து நடிப்பதற்கான கதைகள் நிறைய வந்திருக்கிறது. கதை கேட்டிருக்கிறோம். இன்னும் முடிவு செய்யவில்லை. அடுத்த சில மாதங்களில் நடக்கும்” என தெரிவித்திருக்கிறார் . முன்னதாக நஸ்ரியா , ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக பெங்களூர் டேஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.