தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சில முக்கியப் படங்களில் நடித்தவர் சார்மிளா. தமிழில் நடிகர் பிரசாந்துடன் நடித்த கிழக்கே வரும் பாட்டு படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர். அவர் தனது திரையுலக அனுபவமும் தனிப்பட்ட வாழ்வில் அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டதில் இருந்து...


“எனக்கு பெயர் வைத்ததே தலைவர் கலைஞரும் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாளும்தான். அப்பாவுக்கு அரசியல் சினிமா என பல இடங்களில் தொடர்பு இருந்தது. அதனால் எனக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் எளிதாகக் கிடைத்தது. சிவாஜி சாருடன் ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பேன். அதுதான் நான் நடித்த முதல் திரைப்படம். நம்பியார், சிவாஜி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் என பலபேரின் சிபாரிசு எனக்கு இருந்ததால் சிறுவயதில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு எளிதாகக் கிடைத்தது. அவர்களுக்குப் பிறகு திறமையை நம்பிதான் இங்கே முன்னேற வேண்டியதாக இருந்தது. கிழக்கே வரும் பாட்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அப்படித்தான் கிடைத்தது. குத்தாலம் அருவியில் சூட்டிங். கால் வரையிலான தண்ணீரில் சுட்டிங் என்றார்கள். காலில் ஷூ எல்லாம் மாட்டிக்கொண்டு சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போனால் முட்டிக்கால் வரை தண்ணீர். ஷூவை மாட்டிக்கொண்டு விழுந்து எழுந்துதான் அந்த நீரில் சூட்டிங் செய்து முடித்தோம்” என்கிறார் சார்மிளா. 






விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சார்மிளா அந்த நிகழ்ச்சியின்போதுதான் கருவூற்றார். “ஷூட்டிங் ஏவிஎம் ஸ்டியோவில்தான் நடந்தது. திடீரென எனக்கு வியர்த்து கொட்டா ஆரம்பித்துவிட்டது. என் கணவருடன் அருகில் இருந்த சூர்யா ஹாஸ்பிடலுக்குப் போனேன். இரண்டரை வருடமா முயற்சி செய்தும் குழந்தை எதும் இல்லை. நம்பிக்கை இழந்து இருந்தோம். அந்த சமயத்தில்தான் டாகடர் நான் கருவூற்றிருக்கிறதா சொன்னாங்க. அது உன்மையிலேயே எனக்கு வாழ்க்கையில் கிடைத்த பெரிய கிஃப்ட்” என்கிறார்.