அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தற்போது கடந்த ஆட்சியில் மீன்வளம் நிர்வாகம் மற்றும்  சீர்திருத்தத்துறை அமைச்சராக பணியாற்றினார். இவருக்கு கலை மற்றும் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் உண்டு என்பதை பல முறை மேடையில் பேசும் போது பாடுவதன் மூலமும் விளையாட்டு போட்டிகளில் களத்தில் இறங்கி விளையாடுவதன் மூலம் நாம் அறியலாம். ஜெயக்குமார் சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 



புரூஸ்லீ ரசிகர்:


ஜெயக்குமார் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது இளமை பருவத்தில் புரூஸ்லீ போஸ்டர் ஒன்றின் அருகில் நின்ற படி இருக்கும் புகைப்படம் அது. புரூஸ்லீ நடிப்பில் வெளியான கடைசி திரைப்படமான "என்டர் த டிராகன்" திரைப்படம் சென்னையில் வெளியான போது எடுத்த புகைப்படம் என்று அதற்கு தலைப்பிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் து. ஜெயக்குமார்.  


 






 


புரூஸ்லீ ஒரு சிறந்த கலைஞன் :


தற்காப்பு கலை என்ற ஒன்றை மக்களுக்கு திரையின் மூலம் அறிமுகப்படுத்திய பெருமை புரூஸ் லீயையே சேரும். அவரது வாழ்கை குறிகிய காலத்திலேயே முடிந்தாலும் ஒரு கலைஞனாக வாழ்தவர். தனது சிறு வயதிலேயே சீன நாட்டின் தற்காப்பு கலை, குத்துசண்டை, குங்ஃபூ போன்ற பாரம்பரிய கலைகளை கற்று தேர்ந்தவர். சிறு வயதிலேயே திரையில் நடிக்க வந்துவிட்டார். வேகம் , வலிமையில் இவரை மிஞ்ச ஆளே இல்லை. "தி பிக் பாஸ்" திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர். 


புரூஸ்லீயின் கடைசி நாட்கள்:
 
"கேம் ஆஃப் டெத்" படம் புருஸ்லீ நடித்த நான்காவது படம். அதன்  படப்பிடிப்பின் போது வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான "என்டர் த ட்ராகன்" திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்ததை அடுத்து "கேம் ஆஃப் டெத்" படத்தின் ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்திவிட்டு "என்டர் த ட்ராகன்" படத்தில் நடிக்க சென்று விட்டார் புருஸ்லீ . அப்படம் 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 26ம் வெளியிட திட்டமிட்டு இருந்தனர் படக்குழுவினர். ஆனால் 6 நாள் முன்னதாகவே ஜூலை 20ம் தேதியன்றே புருஸ்லீ  மரணமடைந்தார். 


புரூஸ்லீயின் மரணம் :


புகழின் உச்சியில் இருந்த புருஸ்லீ மரணத்தை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் அவர் மூளை வீக்கத்தால் மரணமடைந்தார் என கூறப்பட்டது. இருப்பினும் இன்றும் அவரது இறப்பு குறித்த சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.


அப்படி ஒரு மகா கலைஞனுக்கு கோடி கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் நமது நாட்டின் முன்னாள் அமைச்சர் து. ஜெய்குமாரும் ஓவருவர் என்பதை அவரின் இந்த ட்விட்டர் பதிவு அறிவுறுத்துகிறது.