டெல்லியில் கடந்த 7 மாதங்களில் சுமார் 26,000 பேருக்கு தெருநாய்கள் கடித்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தெருநாய்கள் தொடர்பான வழக்கில், அனைத்து தெருநாய்களையும் காப்பகங்களுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லி மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி டெல்லியில் மட்டும் சுமார் 10 லட்சம் தெருநாய்கள் இருப்பது தெரியவந்துள்ளது. டெல்லி அரசு உச்சநீமன்ற உத்தரவை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகர்கள் போராட்டம்
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் சினிமா பிரபலங்கள், சின்னத்திரை நடிகை, நடிகர்கள் அண்மையில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது கவனத்தை பெற்றது. நாய்கள் என்றால் இழக்காரமா 5 அறிவுள்ள ஜீவன் என்ன செய்தது. நாய்களை காப்பகத்தில் அடைப்பதை ஏற்க முடியாது என கொந்தளித்தார்கள். இருப்பினும் நடிகைகளின் போராட்டத்திற்கு எதிராக யூடியூப் பிரபலம் ஜி.பி. முத்து வன்மையாக கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். இவ்வாறு நாளுக்கு நாள் தெருநாய்கள் குறித்த பிரச்னை பூதாகரமாக வெடித்து வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல் நடிகை வீடியோ
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா தெருநாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், டெல்லி தெருநாய்களை காப்போம் என்ற பலகையோடு பேசத் தொடங்கிய கனிகா, எல்லோருக்கும் வணக்கம். என்னை பாலோவ் பன்ற எல்லோருக்குமே தெரிந்திருக்கும். நான் ஒரு அணிமல் லவ்வர், நாய்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். எங்க வீட்டில் இருக்குற செல்லக்குட்டி பெயரும் இண்டி தான். நான் ஷாப்பிங் செய்து அணிமலை வளர்ப்பது கிடையாது. நாய்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அந்த அக்கறையில் தான் சொல்கிறேன்.
கனிகா காட்டமாக விமர்சனம்
டெல்லியில் ரொம்ப கொடூரமாக ஒன்று நடந்திக்கிட்டு இருக்கு. ஒட்டுமொத்தமா இருக்க தெருநாய்களை எடுத்துட்டு போய் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துல விடப்போறாங்க. அந்த மாதிரிலாம் பன்றது ரொம்ப ஈசி கிடையாது. எத்தனை தெருநாய்களை அப்புறப்படுத்தி எங்கே கொண்டு போய் அடைப்பீங்க. இப்போ வீட்டில் இருக்க உங்களை ஊருக்கு ஒதுக்குப்புறமா தூக்கி போட்டால் எப்படி இருக்கும். நீங்கள் யார் அதை முடிவு செய்வதற்கு. நீங்கள் யார் அதை முடிவு செய்வதற்கு என கோபத்துடன் கனிகா கேள்வி எழுப்பியுள்ளார்.
தெருநாய்களுக்கு நடிகை ஆதரவு
மேலும் பேசிய அவர், அதுக்காக தெருநாய்களை எல்லாம் உங்க வீட்டில் வைத்துக்கொள்ளுங்க என்று சொல்ல வரலை. நாய் கடித்து யாரோ ஒருவருக்கு ரேபிஸ் நோய் வருவதால் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பதா.நீங்க கேட்குறது புரியுது. தப்பு தப்புதான். அதேபோன்று எத்தனை பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். எத்தனை ரேபிஸ்ட் இருக்கிறார்கள், ஒரு ஆண் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த ஆண்களும் தவறானவர்களாக நினைக்க முடியுமா? 5 அறிவு கொண்ட நாய்களோடு மனிதர்களும் ஒன்றாக முடியுமா என கனிகா கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.