Prakash Raj: சிறந்த நடிகர் மோடிதான்.. பிரதமரை காட்டமாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்


பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் மிகச்சிறந்த நடிகர் என விமர்சித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நடிப்பைத் தாண்டி பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தன் பாஜக எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், இதற்காக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார். மேலும் படிக்க


800 OTT Release: முத்தையா முரளிதரனின் ‘பயோபிக்’ .. 800 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!


இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சாளர். அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் பயணத்தில் ஏற்ற, இறங்கள் அதிகமாகவே இருந்தன. இந்த நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக எடுக்கும் வேலையில் ஸ்ரீபதி இறங்கினார். 800 என பெயரிடப்பட்ட படம் கடந்த அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மேலும் படிக்க


BoxOffice Collection: ஏறுமுகத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இறங்குமுகத்தில் ஜப்பான்.. ஆறாம் நாளில் வசூல் எப்படி?


ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு, கிடா, தி மார்வெல்ஸ், டைகர் 3 ஆகிய படங்கள் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன. இவற்றில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகின. ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25ஆவது படமாக ஜப்பான் உருவாகியிருந்த நிலையில், கோலிவுட்டின் ட்ரெண்ட் செட்டர் படங்களுள் ஒன்றான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றொருபுறம் எதிர்பார்ப்புகளைக் கூட்டியது. மேலும் படிக்க


Rajinikanth Wankhede மீண்டும் வான்கடேவில் ரஜினி...! 2011 வரலாறு திரும்புமா? எகிறும் எதிர்பார்ப்பு..!


இந்தியாவும் நியூசிலாந்து அணியும் உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில்  மோத உள்ள நிலையில் போட்டியை காண சென்னையில் இருந்து மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த். இந்தியாவும் நியூசிலாந்து அணியும் ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில்   மோத உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுக்கும் சம பல வாய்ப்பு இருப்பதால் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இது அமையும். இந்த நிலையில் அந்த போட்டியை நேரில் பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மும்பை புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். முன்னதாக விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் எழுதிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய ரஜினிகாந்த்,   கிரிக்கெட் போட்டியை காண செல்ல இருப்பதாக தெரிவித்தார். மேலும் படிக்க

 


Keerthy Suresh: ட்ரோல் பண்றவங்களுக்கும் நன்றி.. 10 ஆண்டுகள் சினிமாவில் நிறைவு.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வீடியோ!


மலையாள சினிமாவில் தன் திரைப்பயணத்தைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, தற்போது இந்தி என பான் இந்திய அளவில் கோலோச்சி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் - 80களின் பிரபல நடிகை மேனகா இந்தத் தம்பதியின் மகளான கீர்த்தி, குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். மேலும் படிக்க