'எங்கேயும் எப்போதும்' திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் சர்வானந்த். அத்திரைப்படத்தின் சூப்பர்ஹிட்டிற்கு பிறகு டோலிவுட்டில் வலம் வந்தார் சர்வானந்த். டோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்து முக்கிய நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அதனைத்தொடர்ந்து சேரன் இயக்கத்தில் வெளியான் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தில் நித்யா மேனனுடன் நடித்திருந்தார்.
இத்திரைப்படம் நேரடியாக டி.வி.டி யில் வெளியானது.இத்திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அறிமுக இயக்குநர் 'ஸ்ரீ கார்த்திக்' இயக்கத்தில் உருவான 'கணம்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்தது.
சர்வானந்திற்கு தற்போது திருமணம் முடிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் நடிகர் பாலகிருஷ்ணா ,"உங்களுக்கு எப்போது திருமணம் ? " என ஷர்வானந்தை நோக்கி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்,"என் நண்பர் பிரபாஸிற்கு திருமணம் முடிந்த பிறகு தான் எனக்கு திருமணம்" என பதிலளித்துள்ளார். இப்போது சர்வானத்திற்கு திருமணம் முடிவாகியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீ காளகஸ்தி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஐந்து முறை பதவி வகித்த மறைந்த போஜல கோபால கிருஷ்ணா ரெட்டியின் பேத்தியை திருமணம் செய்யவுள்ளார் ஷர்வானந்த்.போஜலா கோபால கிருஷ்ணா ரெட்டி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மணமகளான பத்மா அமெரிக்காவில் சாஃப்ட்வேர் என்ஜினியராக உள்ளாராம். வருகிற ஜனவரி 26 ஆம் தேதி ஷர்வானந்துக்கு பத்மாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும் கோடை விடுமுறையில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளது எனக் கூறப்படுகிறது.