துப்பாக்கி பட வில்லனாக நடிகர் வித்யூத் ஜம்வால் தனது காதலி நந்திதாவுடன் தாஜ்மகாலை விசிட் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


தெலுங்கில் தனது சினிமாப்பயணத்தை சக்தி என்ற படத்தின் மூலம் தொடங்கிய வித்யூத் ஜம்வால் நெகட்டிவ் ரோலில் தொடங்கினார். இதனையடுத்து போர்ஸ் என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தொடர்ந்து வில்லன் ரோல்களிலே அசத்தி வந்தார். இந்நிலையில் தான் தமிழ் சினிமாவின் மாஸ் ஹூரோக்கள் ஆன விஜய் நடித்த துப்பாக்கி மற்றும் அஜித்தின் பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் நடிகர் வித்யூத் ஜம்வால். இந்நிலையில் சற்று வித்தியாசமாக விங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் படத்தில் நண்பராக நடித்திருந்தார்.





தனது திரைப்பயணத்தை வெற்றிக்கரமாக நடத்தி வந்த இவர் ஆடை வடிவமைப்பாளரான நந்திதாவை காதலித்து வருவதாக பல கிசுகிசுக்கள் பரவின.  ஆனால்  இதுவரை எந்தவித தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில் தான், இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக  நடிகர் வித்யூத் ஜாம்வால் தனது காதலி நந்திதா மஹ்தானியுடன் தாஜ்மகாலை டேட்டிங் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த புகைப்படத்தில் நந்திதா தனது கைவிரலில் நிச்சயதார்த்த மோதிரம் அணிந்து இருக்கும்படி போட்டாக்கள் வெளியானதால் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இணையத்தில் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.





ஆடை வடிவமைப்பாளரான நந்திதா மஹத்வானியும், இந்தி நடிகர் டினோ மோரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்துள்ளனர். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததையடுத்து , வித்யூத்தை நந்திதா காதலிக்கத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் நடிகர் வித்யூத் ஜாம்பாலும் நடிகை மோனா சிங்குடன் டேட்டிங் செய்துக் கொண்டிருந்ததாகவும் இரண்டு ஆண்டு உறவுக்குப்பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


 






நடிகர் வித்யூத் ஜாம்வால் சினிமாத்துறையில் மட்டுமின்றி தற்காப்பு கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.  மேலும் விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றை பெற்ற இவர், களரிப்பயிற்று என்ற கலையையும் கற்ற பெருமையைக் கொண்டிருக்கிறார்.