'எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அபர்ணதி. இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை அதிகமாக காதலித்தவர் யார் என்றால் அது இவர்தான். ஆனால், கடைசியில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இது நிகழ்ச்சியை பார்த்த, பங்கேற்ற அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக ஆர்யா மேல் உயிரை வைத்திருந்த அபர்ணதி மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பிறகு, அதில் இருந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார். தேன், ஜெயில் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.


இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலான இந்தியா கிளிட்ஸ் சேனலில் அபர்ணதி கொடுத்த பேட்டி ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் ஆர்யா, ஜி.வி.பிரகாஷ் குறித்தும் பேசியுள்ளார்.


‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் கடைசியில் நிராகரித்ததால் கோபம் வரவில்லையா?


எனக்கு பயங்கரமாக கோபம் வந்தது. நிகழ்ச்சியின்போதே அதை வெளிப்படுத்திவிட்டேன். நான் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்டுவிட்டேன். ஆனால், என் கூட இருந்த மூன்று பெண்கள் கேட்கவில்லை. அதனால், நான் என்ன செய்ய முடியும். மேலும், அந்த நிகழ்ச்சி குறித்து ஆர்யாவிடம் தான் கேட்க வேண்டும். அடுத்த இண்டர்வியூவை ஆர்யாவை வைத்து செய்யுங்கள்.


‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியை நிறையே பேர் கிண்டல் செய்தார்கள். வெளிய வந்ததும் அதுகுறித்து தெரிந்ததும் என்ன நினைத்தீர்கள்.


மோசமாக ஆடை அணிந்து, பெரிதாக நாங்கள் ஒன்றும் செய்யவில்லை. எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். ஷோ முடிந்து வெளியே வந்த பிறகு, குட்டீஸ் நிறையே பேர் எனக்கு பேன்ஸ் ஆனார்கள்.  




நண்பராக தொடரலாம் கூறிய ஆர்யா, போன் செய்தால் எடுக்கமாட்டார் போன்ற புகார் வந்தது குறித்து..?


நான் கால் செய்தால் கண்டிப்பாக ஆர்யா எடுப்பார். ஏனென்றால், ஆர்யாவிற்கு என்ன ரொம்ப பிடிக்கும். எண்டர்டெயின்மெண்ட் பெர்சனாக ஆர்யாவுக்கு என்ன ரொம்ப பிடிக்கும். ரம்ஜானுக்குதான் நான் வாழ்த்து கூறுவேன். மற்றபடி, காதல் அது இது என்று எதைப்பற்றியும் கேட்கமாட்டேன். எனக்கு அதைப்பற்றி எல்லாம் கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை. ஆர்யாவின் குடும்பத்தாருக்கும் வாழ்த்து கூறி, போன் பேசிவிட்டு உடனே கட் செய்துவிடுவேன். வேற எந்தவொரு நினைப்பும் இல்லை.


ஆர்யா மீது பொஸஸ்சீவாக இருந்த நீங்கள் ஜீவியிடம் டூயட் பாடியது நியாய்ம்தானா?


ரொம்ப பைத்தியமாக சாமியார் மாதிரி ஆர்யா ஆர்யா என்று இருக்ககூடாது. அதைதாண்டி நான் மகிழ்ச்சியாக என்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும்.


ஜெயில் படத்தில் ஜிவியுடன் நடித்தது மற்றும் ஷூட்டிங் அனுபவம் குறித்து?


இயக்குநர் ஒரு டயலாக் சொல்வார், நான் அதற்கு எதாவது ஒரு கவுன்ட்டர் கொடுத்திடுவேன். அதையே டயலாக் ஆக வைத்திடுவார் என்று கூறிவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அங்குள்ள மக்கள் படம் குறித்து பேசமாட்டார்கள். எல்லோரும் ஆர்யா, ப்ரியா என்று பின்னாடி இருந்து கிண்டல் செய்வார்கள். சின்னப் பிள்ளைகள் மாப்பிள்ளை...மாப்பிள்ளை...எங்க வீட்டு மாப்பிள்ளை என்று பாட்டு பாடி பின்னாடி வருவார்கள். ஜி.வி.பிரகாஷை நிறைய கிண்டல் செய்வேன். யாருக்கும் அடங்கிப்போறது கிடையாது. எப்போதும் இருப்பது போலத்தான். ஜி.வி. ரொம்ப ஜாலியான கேரக்டர். எது சொன்னாலும் சிரிப்பார். அவரும் நிறைய திட்டுவாரு, அடிப்பாரு இந்த மாதிரி எல்லாம் நடக்கும்.