ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் - ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் 'எனிமி'. இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தில் ஆர்யா மற்றும் விஷால் நடித்திருந்தனர். அவர்களின் காம்பினேஷனுக்கு  ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்த நிலையில் இவர்கள் இருவரின் கூட்டணியில் மற்றொரு படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர், இந்நிலையில் எனிமி படத்தின் அறிவிப்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலை  நாளை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் “PATHALA" என்றும் தெலுங்கில் “PADADHE" என்றும் இந்த பாடலின் வரிகள் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள போஸ்டரில் விஷால் மற்றும் மிருணாளினி இடம்பெற்றுள்ளனர். 







“எனிமி”  படத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். டிக்டாக் புகழ் மிருனாளினி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் குறிப்பாக ஆர்யாவின் காட்சிகளை முன்னதாகவே படமாக்கிவிட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட படங்களுள் “எனிமி” படமும் ஒன்று.இந்நிலையில் படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. இதுவரையில் 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை எனிமி டீஸர் கடந்து சாதனை படத்துள்ளது. படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. ஆனால் திரையரங்கு வெளியீடா அல்லது ஒடிடியா என்பதை பொருத்துருந்துதான் பார்க்க வேண்டும்.


 



இந்த படம் ஆர்யா நடிப்பில் உருவாகும் 32 வது படமாகும். விஷாலுக்கு 30 வது படமாக தயாராகி வருகிறது.எனிமி படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது விஷால், பெயர் வைக்கப்படாத 31 வது படத்தில்  நடித்து வருகிறார். ஹைதராபாத்தில்  'விஷால் 31' படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. நாயகியாக டிம்பில் ஹயாத்தி கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் எண்டர்டைனராக உருவாகி வரும் இந்த படத்தில்  பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர்  நடித்து வருகிறார்கள். விஷால் 31  படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் முழு ஈடுபாட்டோடு நடைப்பெற்று வருகிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.