ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலின் பீட்களில் டெஸ்லா கார்கள் 'லைட் ஷோ' செய்வதைக் காட்டும் வைரலான வீடியோவை பார்த்த டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்கின் அதற்கு செய்த ரிப்ளை டீவீட்டும் வைரலாகி உள்ளது. 


டெஸ்லாவில் ஆர்ஆர்ஆர் பாடல்


இந்த வீடியோவை RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள நியூ ஜெர்சியில், இந்த விடியோவில் நூற்றுக்கணக்கான டெஸ்லா கார்கள் பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டு, நாட்டு நாட்டு பாடல் பீட்டிற்கு ஏற்ப ஒளியை சிமிட்டிவிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. திங்களன்று, இந்த கிளிப்புக்கு பதிலளித்த மஸ்க் இரண்டு இதய எமோஜிகளை பதிவிட்டார். ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹேண்டில் டெஸ்லா நிறுவனர் மஸ்கின் ட்வீட்டிற்கு பதிலளித்தது, "நாங்கள் @elonmusk க்கு அன்பை செலுத்துகிறோம்", என்று எழுதியது.






டெஸ்லாவும் பகிர்ந்த வீடியோ


இந்த வீடியோ டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ கணக்கிலும் பகிரப்பட்டுள்ளது. "ஒரே நேரத்தில் பல வாகனங்களில் ஒளிக்காட்சியை திட்டமிடுங்கள், விளக்குகளின் காவிய திருவிழாவை உருவாக்குங்கள்" என்று நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஆஸ்கார் விழாவில் வரலாற்றை பதிவு செய்த பிறகு, RRR திரைப்பட பாடலான 'நாட்டு நாட்டு' பாடல் உலகம் முழுவதும் இசை கீதமாக மாறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: அதிகாலை 1 மணிவரை வீடியோ கேம்: சரியான பாடம் புகட்டிய தந்தை: கதறி அழுது மனம் மாறிய மகன் - நடந்தது என்ன






ஆஸ்கர் வென்ற நாட்டு நாட்டு


நடிகர்கள் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோரின் ஸ்டெப்களை ரசிகர்கள் மட்டுமல்ல, பல பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் கூட பின்பற்றி வருகின்றனர். ஆஸ்கார் விருதுகளில் 'ஒரிஜினல் பாடல்' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டு, வென்ற முதல் தெலுங்குப் பாடல் 'நாட்டு நாடு' என்பது குறிப்பிடத்தக்கது. டாப் கன்: மேவரிக்கிலிருந்து லேடி காகாவின் 'ஹோல்ட் மை ஹேண்ட்', பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவரில் இருந்து, ரிஹானாவின் 'ரைஸ் மீ அப்', எவரித்திங், எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ்-இல் இருந்து 'திஸ் இஸ் எ லைஃப்',  மற்றும் அப்லாஸ்-இல் இருந்து டெல் இட் லைக் எ வுமன் போன்ற பல ஹிட் பாடல்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் பெருமைக்குரிய விருதை நாட்டு நாட்டு தட்டிச்சென்றது.






கோல்டன் குளோப்ஸ் விருது


கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த அகாடமி விருது வழங்கும் விழாவில், தீபிகா படுகோனே பாடகர்கள் ராகுல் சிப்ளிகஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோரால் இந்த பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. குழு சார்பில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் விருதை ஏற்றுக்கொண்டனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், கோல்டன் குளோப்ஸில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதையும் 'நாட்டு நாட்டு' வென்றது குறிப்பிடத்தக்கது.