சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஒரு சீரியல் எதிர்நீச்சல். இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் குடும்ப பெண்கள் சந்திக்கும் போராட்டங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பல இல்லத்தரசிகள் தங்களின் தினசரி வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்பதால் அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியல் 'எதிர்நீச்சல்'. 



குடும்பத்துடன் எதிர்நீச்சல் நடிகை சத்யப்ரியா



சிறந்த குணச்சித்திர நடிகை :


மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் நகரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை சத்யப்ரியா. இவர் தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 350 மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் மற்றும் வில்லியாக நடித்துள்ளார். இரண்டு விதமான ரோல்களையும் சிறப்பாக நடிக்க கூடியவர். பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா ரோலில் நடித்துள்ளார். மாமன் மகள், சின்ன கவுண்டர், அஞ்சலி, பாட்ஷா, சூர்யவம்சம், பணக்காரன், ரோஜா, படையப்பா, ஏழுமலை, ஃப்ரெண்ட்ஸ் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.  



சின்னத்திரை அம்மா :


நடிகையாக மட்டுமின்றி டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் பல நடிகைகளுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு வில்லியாக திகழ்ந்த நடிகை சத்யப்ரியா 90களில் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். இதுவரையில் 30க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார். இன்றைய சினிமாவில் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரங்கள் இருப்பதில்லை. அதனால் அங்கு வாய்ப்புகள் குறையவே சின்னத்திரையில் கட்சிதமாக பொருந்திவிட்டார் நடிகை சத்யப்ரியா. சுமார் 7 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிய 'கோலங்கள்' சீரியலில் தேவயானியின் அம்மாவாக நடித்திருந்தார். அது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதற்கு பிறகு அதே வரவேற்பு தற்போது நடித்து வரும் எதிர் நீச்சல் சீரியலில் கிடைத்துள்ளது. மாமியாராக விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார். 



குடும்பத்துடன் சத்யப்ரியா :


சமீபத்தில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். நடிகை சத்யப்ரியாவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்கள். அவரின் மகன்  அமெரிக்காவில்  வாஷிங்டன்னில் வேலை செய்த இடத்தில் நியூஜெர்ஸியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். தனது குடும்பத்துடன் சத்யப்ரியா இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதை பார்த்த அவரின் ரசிகர்கள் பலரும் சீரியலில் மட்டுமே வில்லத்தனமான மாமியார். நிஜ வாழ்க்கையில் அமெரிக்கா பெண்ணுக்கு ஒரு அன்பான மாமியாராக இருக்கிறார் என பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.