இந்தியத் திரைத் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்த நாள்.


கமலின் ஆரம்பக் கால வாழ்க்கை


ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், 1954-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் - ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தார் கமல் ஹாசன். இவரது இயற்பெயர் பார்த்தசாரதி. இவருடன் பிறந்தவர்கள் சாருஹாசன், சந்திரஹாசன், நளினி.


தொடக்கக் கல்வியை பரமக்குடியில் முடித்த கமல்ஹாசன், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் 1967-ம் ஆண்டு, சென்னை புரசைவாக்கத்திலுள்ள சர் எம்.சி.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படித்தார்.


Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!


குடும்பம்
 
சிறுவயது முதலே அவருக்கு கலையின் மீது அதீத ஆர்வம். அதனால் டிகேஎஸ் நாடகக்குழுவில் சேர்ந்தார். அதன்பின் நண்பர்களுடன் இணைந்து அவரே ஒரு நாடகக் குழுவை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து திரைப்படத் துறையில் நடன கலைஞராக இருந்த தங்கப்பன் மாஸ்டரிடம் சேர்ந்து கலைப் பணியாற்றினார். நடனக் கலைஞராவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாகத் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இவரது சகோதரர் சந்திர ஹாசன் 2017ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி லண்டனில் காலமானார். இவரது மகள் தான் நடிகை அனு ஹாசன் ஆவார்.


இவரது இன்னொரு சகோதரர் சாரு ஹாசனுக்கு 91 வயது ஆகிறது. இவர் இன்னமும் நடித்து வருகிறார். கமல் ஹாசன் பாலிவுட் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஸ்ருதி ஹாசன்,  அக்ஷரா ஹாசன் ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருமே தற்போது திரைப்படங்களில் நடித்து வருகின்றனர்.


Kamal Hasan Next Movie : மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் கமலஹாசன்..! 35 ஆண்டுகள் காத்திருப்புக்கு முடிவு..! ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்...


திரைவாழ்க்கை


நடிகர், நடன ஆசிரியர் மட்டுமல்லாமல், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், கதை-திரைக்கதை ஆசிரியர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், ஒப்பனைக் கலைஞர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், இலக்கியவாதி, அரசியல்வாதி எனப் பன்முகத் திறமைகொண்டவர் கமல்ஹாசன்.


1960-ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ படத்தில் குழந்தை நட்சித்திரமாக இவர் அறிமுகமானார். அப்போது தொடங்கிய இவரது திரைப்பயணம் 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது. எத்தனையோ மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார். 




இவர் ஏற்காத பாத்திரங்களே இல்லை என்று கூறுமளவுக்கு அத்தனை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஹே ராம்,  விருமாண்டி, விஸ்வரூபம், விஸ்வரூபம்-2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். மகாநதி, ஆளவந்தான், உன்னைப்போல் ஒருவன், தூங்காவனம் உள்பட பல திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.


அரசியல் வாழ்க்கை
2018-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாபெரும் அரசியல் கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தை நடத்தினார். அதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வீட்டுக்குச் சென்று அவரின் சகோதரரைச் சந்தித்து ஆசி பெற்றார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை எதிர்த்து போட்டியிட்ட கமல்ஹாசன், 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.