திண்டுக்கல் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை துஷாரா விஜயன் சினிமாவில் அறிமுகமானது பா. ரஞ்சித்தின் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில். முதல் படமே அவருக்கு ஒரு வெற்றி படமாக அமைந்தது. முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்.
அந்த வகையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் துஷாரா விஜயன் தற்போது பகிர்ந்துள்ள போட்டோவால் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. துஷாரா விஜயன் தனது இன்ஸ்டா போஸ்டில் நடிகர் ஹரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதற்கு கேப்ஷனாக 'என்னுடைய ஹரி' என பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு துஷாரா விஜயன் ஒரு வேலை காதலில் விழுந்துவிட்டாரா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
சந்தேகத்தை எழுப்பிய துஷாரா விஜயன் போட்டோ :
பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களாக நடித்தவர் நடிகர் ஹரி. துஷாரா விஜயன் நடித்த 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படத்தில் கூட நடிகர் ஹரி நடித்திருந்தார். அந்த சமயத்தில் தான் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகர் கார்த்தி, கலையரசன் நடித்த 'மெட்ராஸ்' திரைப்படத்தில் ஜானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒரு முகம் ஆகியுள்ளார் ஹரி. தற்போது துஷாரா விஜயன் வெளியிட்டுள்ள போட்டோ பலரும் இது ஏன் காதலாகத்தான் இருக்க வேண்டுமா? நண்பர்களாக கூட இருக்கலாமே என வேறு கோணத்தில் பார்த்து வருகிறார்கள். இருப்பினும் இருவர் தரப்பிலும் இது குறித்து அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.