பிரைம் வீடியோவின் முதல் ஹிந்தி திகில் தொடரான 'அதுரா'வின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் தான் வெளியாகி பார்வையாளர்களை மிரள செய்தது. ரசிகா துகல், இஷ்வாக் சிங், ராகுல் தேவ், ரிஜுல் ரே, சாஹில் சலாத்தியா,ஜோவா மொரானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த தொடர் வரும் ஜூலை 7ஆம் தேதி பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 


பானர்ஜி எழுதிய ஸ்கிரிப்டில் ஆதுரா அனன்யா பானர்ஜி மற்றும் கவுரவ் கே. சாவ்லா இணைந்து இயக்கிய இப்படம் ஒரு பிடிவாதமான ஒரு கதையை பயமுறுத்தும் வகையிலும், குளிர்ச்சியான அனுபவம் நிறைந்ததாகவும் உருவாக்கியுள்ளனர். இந்த தொடரில் மிகவும் அழகான ஒரு விஷயமாக பார்வையாளர்களை கவர்ந்த ஒன்றாக கருதப்படுவது ஊட்டியின் அழகிய பேக் கிரவுண்ட், அழகான பள்ளியின்  பின்னணி, அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் சர்ரியல் சுற்றுப்புறம். 


 



புகழ்பெற்ற ஒரு ஹாஸ்டல் வசதியுடன் கூடிய ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்களின் ரகசியங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திகில் தொடருக்கு  வினோதமான உணர்வையும் சரியான சூழ்நிலையையும் வழங்கியுள்ளது. ஆதுரா அனன்யா பானர்ஜி மற்றும் கவுரவ் கே. சாவ்லா இந்த லொகேஷன் வேட்டை குறித்து தங்களின் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். "எங்கள் ஸ்க்ரிப்டுக்கு மிகவும் பொருத்தமான ஒரு இடமாக ஊட்டி அமைந்தது. அதன் வரலாற்று வசீகரம், பழமையான கட்டிடக்கலை உள்ளிட்டவை ஆதுராவை உயிர்ப்பிக்க சரியான ஒரு கேன்வாஸை வழங்கியது. வளிமண்டல சூழலும், ஒளியும் நிழலும் நிறைந்த இடங்களும் பயங்கரமான காட்சிக்கு கூடுதலாக உயிர் கொடுத்தது. இந்த வசீகரமான பின்னணி நிச்சயம் பார்வையாளர்களை கவரும் என்பது உறுதி. 


இது குறித்து அனன்யா பானர்ஜி கூறுகையில் " நிஜமான பள்ளி மற்றும் அதன் மந்தமான வானிலை, மங்கலான கட்டிடங்கள்,நிழலில் சூழ்ந்த மூளைகள் உள்ளிட்டவை முதுகெலும்பை நடுங்க செய்யும் சூழல் உருவாக்கியது.அந்த இடமே கதையை மேலும் சிலிர்க்க வைத்தது. இந்த தொடர் நிச்சயம் திகிலூட்டும் அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்" என்றார்.  


2022 மற்றும் 2007 ஆகிய இரண்டு கலகட்டங்களுக்கு பயணிக்கும் இந்த தொடரில் பழைய மாணவராக இஷ்வாக் சிங் மற்றும் பிரச்சனையில் சிக்கியுள்ள மாணவராக ஷரோனிக் அரோரா இடையே கதை பயணிக்கிறது. அதை எவ்வாறு சம்பந்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது தான் கதைக்களம். இந்த திகில் நிறைந்த கதைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.