ரஜினியின் ரசிகையாக இருக்கும் ஒரு பெண் போக்குவரத்து காவலரின் கதை துமாகி (DuMaKi) என்ற யூடியூப் சேனலில் வெப் சீரிஸாக வெளியாகவுள்ளது. 


தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் அனைவருக்குமே மிகவும் விருப்பம். ஷாருக்கான் போன்ற பெரிய பெரிய பாலிவுட் ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் ரஜினியைப் பற்றிய ஏதாவது ஒரு விஷயத்தை ஏதாவது ஒரு சீனிலாவது காண்பிக்காமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பாலிவுட் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் ரஜினி. 




ரஜினியின் பாலிவுட் ரசிகர்கள்:


பேருந்து நடத்துனராக இருந்து, பின்னர் தமிழ் திரையிலகில் 1978-ல் கால் பதித்த ரஜினிக்கு தமிழகம் மட்டுமல்லாது, இந்திய அளவில் மிகப்பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் பாலிவுட்டிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படும். 


இதற்கு சான்றாக, ஷாருகான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை கூறலாம். இப்படத்தின் க்ளைமேக்ஸ் கிரெடிட்ஸில் வரும் லுங்கி டான்ஸ் பாடலை “ட்ரிபியூட் டூ தலைவா” எனக் கூறி ரஜினியின் போட்டோக்களை செட் முழுவதும் ஒட்டியிருப்பர். ஷாருக்கின் இன்னொரு படமான ரா 1 படத்திலும் ரஜினி இடம் பெரும் காட்சி இடம் பெற்றிருக்கும். 


சுஷாந்த் சிங் ராஜ் புத் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தில் ரஜினியின் ரசிகராக நடித்திருப்பார். இப்படியாக, பல படங்களில் ரஜினிக்கு மரியாதை செலுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அந்த வரிசையில் படங்களைப் போல, “ட்ராஃபிக் ரஜானி” என்ற வெப் சீரிஸ் எடுக்கப்பட்டுள்ளது.






 


ட்ராஃபிக் ரஜானி:


 



யூடியூபில் உள்ள துமாகி (DuMaKi) என்ற சேனலில் விரைவில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ட்ராஃபிக் ரஜானி. ரஜினியின் ரசிகையாகவும் போக்குவரத்து காவல் துறை அதிகாரியாகவும் வாழ்க்கை நடத்தி வரும் ரஜானி என்பவரை சுற்றித் திரைக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் டைட்டில் ட்ராக்கும் வெளியாகி சிலரின் கவனத்தை ஈர்த்தது.