துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேஃபாரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மலையாளத்தின் முதல் பெண் சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ளது லோகா முதல் பாகம் : டாமினிக் அருண் இயக்கி சந்திரா. கல்யாணி பிரியதர்ஷன் , நஸ்லென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் லோகா படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வருகிறது
லோகா திரைப்பட விமர்சனம்
படம் தொடங்கியதில் இருந்து சுவாரஸ்யம் குறையாமல் கதை நகர்கிறது. குறிப்பாக இடைவேளைக் காட்சி பார்ப்பவர்களை சிலிர்க்க வைக்கும். புராணக் கதையும் ஃபேண்டஸியும் கலந்து உருவாகியுள்ள லோகா திரைப்படம் மலையாள சினிமாவில் ஒரு மைல் கல். சூப்பர் ஹீரோ படங்களில் லோகா திரைப்படம் பான் இந்தியா அளவில் புதிய சாதனையை படைக்கும் என படம் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் காட்சி உருவாக்கமும் , வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன. நஸ்லென் , கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பு சிறப்பு.
ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் மலையாள படங்கள் தனித்துவமான கதைகளை சொல்லி வருகின்றன. முன்னதாக மின்னல் முரளி , தற்போது லோகா என சூப்பர் ஹீரோ படங்களிலும் மலையாள படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கு எடுத்துகாட்டாக இருக்கும் என படம் பார்த்த ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது