10 வருடங்களாக சினிமாத் துறையில் இருக்கும் துல்கர் சல்மான், தனது கேரியரில் வாரிசு அரசியலின் தாக்கம் குறித்து அடிக்கடி பேசியுள்ளார். பிரபல மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான நடிகர் துல்கர் சல்மான், தானே அதை பலமுறை தடுக்க முயற்சித்ததாகக் கூறினார். துல்கர் தனது தந்தையுடன் ஒப்பிடப்படுவார் என்ற பயத்தின் காரணமாக நீண்ட காலமாக நடிப்பில் இருந்து விலகி இருந்தார்.அதன்பிறகு செகண்ட் ஷோ படத்தின் மூலம் அறிமுகமானார்.  ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்த துல்கர் ஏன் திரைத்துறைக்கு வந்தார் எனக் கேட்கப்பட்டதற்கு அவர் முன்பு  ஒருமுறை “ஒரேமாதிரியான ரொட்டின் வாழ்க்கை போரடித்துவிட்டதாகக் கூறினார்”.ஆனால் சமீபத்தில் தனது முதல் சம்பளம் குறித்துக் கூறிய அவர் அது சிறுவயதில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்ததாக பகிர்ந்து கொண்டார்.


இருப்பினும், தனது 10 வயதில் பெற்ற முதல் சம்பளத்தை பெறுவதற்கு தனக்கு தன் தந்தை உதவவில்லை என்றும் தானே உழைத்துச் சம்பாதித்ததாகவும் துல்கர் தெளிவுபடுத்தினார். டிஓசி பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளியில் படித்த துல்கர் சமீபத்தில் தனது முதல் சம்பளமாக ரூபாய் 2,000 சம்பாதித்ததை நினைவு கூர்ந்தார், மேலும் நேபாட்டிசம் காரணமாக தனக்கு எந்த நன்மையும் இல்லை என்றும் கூறினார்.



”என்னோட முதல் சம்பளம்....” : தனது குழந்தைப்பருவ சீக்ரெட்டை உடைத்த துல்கர் சல்மான்


கர்லி டேல்ஸ் என்கிற யூடியூப் சேனலுடனான உரையாடலின் போது துல்கர், "நான் முதல் சம்பளம் பெற்றபோது எனக்கு 10 வயது. அதற்கும் என் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் ராஜீவ் மேனனின் விளம்பர நிறுவனத்தால் நான் எனது பள்ளிக்கூடத்தில் எல்லோரையும் போலத் தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அவர்கள் என் பள்ளிக்கு வந்தனர். விளம்பரத்துக்கு குழந்தைகளை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் நானும் ஒருவன். அதற்காக அவர்கள் எனக்கு ரூபாய் 2,000 கொடுத்தார்கள்”என்றார். 






துல்கர் மிருனால் தாகூர் நடித்து அண்மையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் அனைத்து தரப்பிலிருந்தும் பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.