இன்ஸ்டாகிராமில் மனதுக்கு மிக நெருக்கமான பதிவுகளை இடுவதற்குப் பெயர் போனவர் நடிகர் துல்கர் சல்மான். தனது மகள் பிறந்தநாள், தனது அக்காவின் பிறந்தநாள், தனது அம்மாவின் பிறந்தநாள், தனது தந்தை மம்மூட்டியின் பிறந்தநாள் என எல்லோருக்கும் தனித்துவமான ஸ்பெஷலான பதிவுகளை இடுவார். அண்மையில் அந்த வகையில் தனது தந்தை மம்மூட்டி தாய் சுல்ஃபத் இருவருக்குமான திருமணநாளை ஒட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த துல்கர், ‘உலகின் சொல்லப்படாத பெருங்காதல் கதை ’ என வர்ணித்துள்ளார்.
துல்கர் சல்மான் இரண்டு நாட்களுக்கு முன்புதான் தனது மகளின் ஐந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.