‛வேற மாறி.. வேற மாறி...’ புதிய பாதையில் துல்கர்... தொடங்கியது ‛கிங் ஆஃப் கொத்தா’ ஷூட்!
மலையாள நட்சத்திரம் துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்த” ஷூட்டிங் துவங்கியது.

மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் துல்கர் “கர்வான்” என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரின் அழகாலும் நடிப்பாலும் கன்னிப் பெண்களை கவர்ந்த துல்கர், சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுப் என்ற ஹிந்தி படம் மூலம் பாலிவுட் உலகில் களம் இறங்கியுள்ளார். சன்னி டியோல், ஸ்ரேயா தன்வந்திரி மற்றும் பூஜா பட் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் ஆகிய செப்டம்பர் 23 ஆம் தேதி வெளியானது. நெகடிவ் விமர்சனங்கள் கொடுக்கும் திரை விமர்சனர்களை தேடி தேடி வெறிகொண்டு கொல்லும் ஒரு கொலையாளியின் வாழ்வை மையமாக கொண்டது இப்படத்தின் கதைகரு.
இப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், துல்கரின் அடுத்த படமான “கிங் ஆஃப் கொத்தா”-வின் ஷுட் காரைக்குடியில் இன்று துவங்கவுள்ளது. துல்கருக்கு ஜோடியாக, ஜகமே தந்திரம் புகழ் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கவுள்ளார். சாந்தி கிருஷ்ணா மற்றும் கோகுல் சுரேஷ் ஆகிய நடிகர்களும் இப்படக்குழுவில் உள்ளனர். படத்தின் ஷூட் இன்று துவங்வுள்ள நிலையில், நடிகர் துல்கர் படக்குழுவுடன் நாளை இணையவுள்ளார்.
இப்படத்தின் கதை களம் ரெட்ரோ காலத்தில் அமைந்து இருக்கும் என்று பேசப்படுகிறது. இப்படத்தை வே ஃபாரர் ஃப்லிம்ஸ் தயாரிக்கவுள்ளனர்.
இணையவாசிகள் பலர், அபிலாஷ் ஜோஷி எனும் அறிமுக டைரக்டர் இப்படத்தை இயக்கவுள்ளார். பெரிய நட்சத்திர பட்டாளமும் இதில் இணையப்போவதில்லை. ஆனாலும் இப்படத்திற்காக அதிகப்படியான எதிர்ப்பார்பு உள்ளது. இதற்கு காரணம் துல்கரின் நடிப்பின் மீதுள்ள நம்பிக்கைதான் என்று புகழ் பாடி வருகின்றனர்.
துல்கர் சமீபத்தில் நடித்த சீதா ராமம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை துல்கரின் நடிப்பை காணாத வட இந்திய மக்களும், இதில் அவர் திறமையை மெச்சினர். தற்போது களத்தில், சுப் படம் இறங்கி அசுர வேட்டை புரிந்து வருகிறது.