தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் , மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் இருப்பவர் துல்கர் சல்மான். தற்போது தெலுங்கு , இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் ஹே சினாமிகா என்னும் திரைப்படம் இவரது நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் துல்கரின் நடிப்பில் அடுத்த வெளியீட்டிற்காக வரிசையில் இருந்த திரைப்படம்தான் சல்யூட். இந்த திரைப்படத்தை ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்க , தனது Wayfarer Films நிறுவனம் சார்பில் துல்கர் சல்மானே படத்தை தயாரித்திருந்தார். என்றோ வெளியாகியிருக்க வேண்டிய படம் என்றாலும் கொரோனா காலக்கட்டத்தால் தள்ளிப்போன திரைப்படங்களுள் இதுவும் ஒன்று. படம் கடந்த ஜனவரி மாதம்  திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  மூன்றாவது அலையால் மீண்டும் தள்ளிப்போனது. இந்நிலையில் துல்கர் சல்யூட் படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளார். படம் நாளை (மார்ச் 18 ) வெளியாகும் என்ற அறிவிப்பை என தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார்.







இந்நிலையி்ல் படம் ஒடிடி-யில் வெளியாவதற்கு கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் (film Exhibitors United Organisation of Kerala (FEUOK)) கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய சங்கத்தின் தலைவர் விஜயகுமார். படத்தை முன்னதாக துல்கர் திரையரங்க வெளியீட்டிற்கு தருவதாக உறுதியளித்திருந்தார். இப்போது எப்படி ஓடிடி தளத்திற்கு விற்றார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. மறு அறிவிப்பு வரும் வரையில் கேரள திரையரங்குகளில்  துல்கரின் படங்கள் வெளியாகாது எனவும் அவருக்கு இனிமேல்  கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஒத்துழைக்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.நாளை சல்யூட் திரைப்படம் ஓடிடியில் தமிழ் , மலையாளம் , தெலுங்கு என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள சூழலில் இந்த விவகாரம் துல்கருக்கும் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.