சில்க் ஸ்மிதா கவர்ச்சியான நடிகையாக அறியப்பட்டாலும் அவரது வாழ்க்கையும் மரணமும் இன்றும் மர்மமாகத்தான் இருக்கிறது. அவ்வபோது சில்க்குடன் நெருங்கி பழகியவர்கள், அவரை பற்றி தெரிவிக்கும் கருத்துகள் எல்லாவுமே சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என்பதுதான். இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவிற்கு ஆரம்ப நாட்கள் முதலே அவரது குரலாக இருந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஹேம மாலினி அவரை பற்றிய பல அறியாத பக்கங்களை பகிர்ந்திருக்கிறார்.
“முதன் முதலாக வண்டிச்சக்கரம் படத்துல அவங்களுக்காக குரல் கொடுத்தேன். அப்போ அவங்களுக்கு 17 வயசு எனக்கு 28 வயசு. விணுச்சக்கரவர்த்தி சார்தான் அவங்களை அறிமுகப்படுத்தினாங்க. சில்க் எப்படியும் முன்னேறனும்னு ஆர்வமாக இருந்தாங்க. ரொம்ப நல்ல பொண்ணு. சில்க்கிற்கு கவர்ச்சியாக நடிப்பதை விட கேரக்டர் ரோல்ல நடிக்கத்தான் ஆசை. அலைகள் ஓய்வதில்லை படத்தை தவிர வேறு எந்த படத்திலும் அவங்க கேரக்டர் ரோல்ல நடிக்கல. அந்த வருத்தம் கடைசி வரைக்கும் இருந்தது. அவங்களை பற்றிய விமர்சனம் வரும் பொழுது அதை முன்னேற்றத்திற்கு எடுத்துக்கொள்ளுவாங்க. சாவித்திரி அம்மா போல ஆகனும், அவங்கள போல கேரக்டரில் நடிக்கனும்னுதான் அவங்க ஆசை. அவங்க ஒரு நாய் வளர்ப்பாங்க. ஒரு நாள் அந்த நாய் இறந்துடுச்சு. அதனால ஒரு வாரம் முழுக்க அழுதாங்க. ஷூட்டிங்கும் போகல. அந்த அளவிற்கு அன்பானவங்க. என்னை டெர்ட்டி பிக்சர்ல டப்பிங் பேச கூப்பிட்டாங்க. நான் போகல.
அந்த கதை சில்க்கின் உண்மையான கதையா படல. சில்க்கோட இடத்துல வித்தியாபாலனை வச்சு பார்க்க முடியல. சில்க்கிற்கு குடும்ப வாழ்க்கையில அவ்வளவு ஆசை. நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. சில்க்கிற்கு சினிமா வாழ்க்கையை நிதானிக்க தெரியலை. சில்க் இறப்பதற்கு முதல்நாள் வரையிலும் விரக்தியாகத்தான் பேசிக்கொண்டிருந்தாங்க. தற்கொலையா இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம் கொலையும் இல்லை. கொலை திட்டமிட்டு நடக்குறது . இது ஒரு எதிர்பாராம நடந்த விபத்தாக இருக்கும். சில்க்கோட இறுதி அஞ்சலிக்கு நான் போகவில்லை. அதை பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை. சில்க் வாழத் தெரியாம வாழ்க்கையை முடிச்சுக்கிட்டாங்க “ என ஹேமமாலினி சில்க் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார் ஹேமமாலினி