மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 23 ஆம் தேதி திரெளபதி 2 திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இதே  நாளில் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திரெளபதி 2 படத்திற்கு ரசிகர்களிடம் பெரியளவில் கவனம் கிடைக்காமல் போய்விட்டதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Continues below advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50 ஆவது திரைப்படமாக உருவான மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகளுக்குப் பின் திரயரங்கில் ரீரிலீஸ் ஆகியுள்ளது. ஏதோ புதுப்படம் வெளியானது போல் அனைத்து மாநிலங்களிலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி திரையரங்கை திருவிழாக்கோலமாக மாற்றியுள்ளார்கள். ரீரிலீஸான முதல் நாளே மங்காத்தா திரைப்படம் இந்தியவில் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மறுபக்கம் புதிதாக வெளியான மோகன் ஜி இயக்கிய திரெளபதி 2 திரைப்படம் முதல் நாளே மண்ணை கவ்வியுள்ளது சோகத்திற்குரிய நிகழ்வு

மங்காத்தா vs திரெளபதி 2

மங்காத்தா படத்தில் தான் அஜித் வில்லன் என்றால் நிக வாழ்க்கையில் மோகன் ஜிக்கு வில்லனாக வருவார் என்று யாரும் கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள். திரெளபதி என்கிற சர்ச்சைக்குரிய சாதிய பெருமிதம் பேசும் படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கியுள்ள படம் திரெளபதி 2. ரிச்சர்ட் ரிஷி , நட்டி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

Continues below advertisement

விஜயிடம் தப்பி அஜித்திடம் மாட்டிய மோகன் ஜி 

வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருந்து ரிலிஸீல் சிக்கல் ஏற்பட்டது. நேற்று ஜனவரி 23 ஆம் தேதி அஜித்தின் மங்காத்தா மட்டுமில்லாமல் விஜயின் தெறி திரைப்படமும் ரீரிலீஸ் ஆக இருந்தது. இதனால் தனது படம் பாதிக்கப்படும் என்று கருதிய மோகன் ஜி தெறி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தானுவிடம் கேட்டுக்கொண்டதால் அப்படத்தின் ரீரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. விஜயிடம் தப்பிய மோகன் ஜி அஜித்திடம் வசமாக மாட்டிக்கொண்டார். மங்காத்தா படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் சன் பிக்ச்சர்ஸ் செய்யவில்லை. இரு படங்களும் ஒன்றாக வெளியாகவே திரெளபதி 2 திரைப்படம் முதல் நாள் தொடங்கியே வசூலில் பெரிய அடி வாங்கியுள்ளது . இது குறித்து மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

புலம்பும் மோகன் ஜி 

தனது எக்ஸ் பக்கத்தில் " திரெளபதி 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை.. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு.. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23 வெளியாகிறது என்ற செய்தியை கொண்டு சேர்க்க முடியவில்லை.. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.. மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை.. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள்.. திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களை கடந்து வந்துள்ளேன்.. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் G.." என்று அவர் பதிவிட்டுள்ளார்