தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரையில் வாரந்தோறும் 5க்கும் அதிகமான படங்கள் வெளியாகின்றன. இதில், நடிகர், நடிகளையும் தாண்டி படத்திற்கான கதையை ரசிகர்கள் இப்போது ரசிக்க தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் ரசித்த படம் தான் டிராகன்.


முழுக்க முழுக்க காதல் காட்சி என்று இல்லாமல் ஸ்கூல், கல்லூரி, காதல், வேலை என்று ஒரு இளைஞனைப் பற்றிய படமாக டிராகன் வெளியானது. போலி சான்றிதழ் மூலமாக வேலையை பெற்ற ஹீரோவிற்கு அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் டுவிஸ்ட். சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்ற இந்தப் படம் ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் ரூ.115 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது.


பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து மிஷ்கின், கௌதம் மேனன், கயாடு லோகர், கேஎஸ் ரவிக்குமார், அனுபமா பரமேஸ்வரன், இவானா (சிறப்பு தோற்றம்) ஆகியோர் பலர் நடித்திருந்தனர். லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றதோடு தயாரிப்பாளருக்கு அதிக லாபத்தையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.


இந்தப் படத்திற்கு போட்டியாக வந்த தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் காதல் கதையை மையப்படுத்தி வெளியாகியிருந்தாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக அந்தளவிற்கு ரீச் கொடுக்கவில்லை. ரூ.15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.36.8 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படத்தின் மூலமாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாராயண் ஹீரோவாக அறிமுகமானார். இவர், ஏற்கனவே தனுஷின் வாத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


டிராகன் படத்துடன் ஒப்பிடும் போது நீக் ரீச் கொடுக்கவில்லை. ஒருவேளை சோலோவாக வெளியாகியிருந்தால் நீக் (நிலவுக்கு என் மீது என்னடி கோபம்) நல்ல வசூல் கொடுத்திருக்குமோ? இதை ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும்.