தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரம்பா தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு பிரபு நடித்த உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்பாவுக்கு 1996 ஆம் ஆண்டு வெளியான உள்ளத்தை அள்ளித்தா படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித், பிரபுதேவா, கார்த்திக்,பிரசாந்த், முரளி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார். நடித்த காலக்கட்டத்தில் இவரைச் சுற்றி சில வதந்திகள் கிளம்பினாலும் இன்றளவும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் மறக்க முடியாத நடிகைகள் பட்டியலில் ரம்பா உள்ளார்.
இவர் 2010 ஆம் ஆண்டு இந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரம்பா அவ்வப்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அதேபோல் சமீபத்தில் கணவரை இழந்த நடிகை மீனாவுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவரது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்ற புகைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ரம்பா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் நெகட்டிவாக பேசாதீர்கள். விளையாட்டுக்கு கூட அப்படி பண்ணாதீர்கள். உங்களுடைய உடல் இதற்கான வேறுபாட்டை அறியாது. ஆனால் வார்த்தைகள் கொடுக்கும் எனர்ஜி அளப்பறியது. பேசும் வார்த்தைகளை சரியாக அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.