நடிகர் சூர்யா மும்பை விமான நிலையத்தில் தனது மகனை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கேட்டுக் கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.  இந்த வீடுயோ தற்போது வைரலாகி வருகிறது. 






இதற்கிடையே ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணித்த நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்து அந்நிறுவம் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளது. இந்த போஸ்ட்டும் தற்போது வைரலாகி வருகிறது. 






தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட திரைப்படகள், தரமான கதைகளத்தை கொண்ட படங்கள் ஆகியவற்றை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், இவர் நடித்து வெளியான 'சூரரை போற்று' திரைப்படத்திற்காக தேசிய விருதை வென்றார். மேலும் இவர் தயாரிப்பில் வெளியான ஜெய் பீம், கார்கி, ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுக்களை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த பிரம்மாண்ட படத்தை, ஸ்டுடியோ கிரீம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, நிஷாந்த் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகர் சூர்யா- இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாக உள்ளது. இந்த கூட்டணியும் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட வெற்றிமாறனிடம் வாடிவாசல் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வெற்றிமாறன், “வாடிவாசல் படத்திற்கான முதல் கட்ட பணிகள் தொடங்கிவிட்டன. அதற்காக லண்டனில் கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது. தற்போது சூர்யா பயிற்சி எடுத்து வரும் ஜல்லிக்கட்டு காளை போல ஒரு ரோபோ காளையும் உருவாகி வருகிறது” என்று பதிலளித்தார். எனவே இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.