நடிகர் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்ற புஷ்பா : தி ரைஸ் திரைப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலான 'ஊம் சொல்றியா மாமா ஊஹூம் சொல்றியா மாமா...' பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது. அந்த பாடலில் கவர்ச்சி நடனம் ஆடிய நடிகை சமந்தாவிற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. சமந்தாவிற்கு கட் அவுட் எல்லாம் வைத்து கொண்டாடும் அளவிற்கு இந்த பாடல் ஒரு ஹிட் பாடலானது.
சமந்தாவிற்கு பதிலாக காஜல் :
தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா : தி ரூல் திரைப்படத்திலும் ஒரு ஐட்டம் சாங் உள்ளது ஆனால் அதில் நடிகை சமந்தா அல்லாமல் வேறு ஒரு நடிகைக்கு வாய்ப்பு கொடுக்க போவதாக தகவல்கள் பரிமாறப்பட்டன. கவர்ச்சி டான்ஸ் ஆடுவதற்கு பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் ஒன்று பரவி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் அந்த கவர்ச்சி நடனத்திற்கு பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிகின்றன. இது அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் காஜல் அகர்வால் கவர்ச்சி கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறார் என கூறுகின்றனர்.
கவர்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுக்க விரும்பும் காஜல் :
குழந்தை பிறந்த பிறகு கடினமாக ஒர்க் அவுட் செய்து உடல் மெலிந்து காணப்படுகிறார் நடிகை காஜல் அகர்வால். தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க தயாராகிவிட்டார். சமீபத்தில் இயக்குனர் ஒருவர் அவரிடம் வுமன் சென்ட்ரிக் திரைப்படத்தின் கதை ஒன்றை கூற அதை தவிர்த்துள்ளார் நடிகை காஜல் அகர்வால். அவரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் அவர் கிளாமர் கதாபாத்திரங்களை தேடுவதை சுட்டி காட்டுகிறது. மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக இது போல ட்ரை செய்து வருகிறார் எனவும் சிலர் கூறி வருகிறார்கள். ஒரு வேலை புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட கிரீன் சிக்னல் கொடுக்கலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.
காஜலின் திருமண வாழ்க்கை :
2020ம் ஆண்டு தான் நடிகை நடிகை காஜல் அகர்வாலுக்கு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது. பிரசவத்திற்கு பிறகு ரெஸ்டில் இருந்த காஜல் அகர்வால் தற்போது மீண்டும் தனது நடிப்பை தொடர விரும்புகிறார். மேலும் காஜல் அகர்வால் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.