திரைப்படம்  கலை, வசனம், கருத்து, இசை, பாடல், நடிப்பு என அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.  குறிப்பாக திரைப்படம் ஆரம்ப காலத்தில் நகர மக்களின் பொழுதுபோக்காக விளங்கியது. தற்போது பொழுதுபோக்காக மட்டுமின்றி பொதுமக்கள் தங்கள் வாழ்வில் உள்ள பிரச்சினைகளை மறப்பதற்கும் திரைப்படம் மிக முக்கிய பங்காக உள்ளது. இதனால் நகரங்களை தாண்டி கிராம மக்களின் வாழ்விலும் சினிமா இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.  பொதுமக்களை எளிதாக சென்றடையும் இன்றைய திரைப்படங்களில் நல்லதோ கெட்டதோ அதனையே உதாரணமாக இன்றைய இளைஞர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.  திரைப்படங்களில் வரும் கெட்ட செய்தியை அங்கேயே விட்டுவிட்டு அதில் வரும் நல்ல கருத்துக்களை, தகவல்களை எடுத்துக் கொண்டு தனது வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை இளைஞர்கள் தேட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மாறாக சினிமா மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் ரசனையும் இன்றைய சினிமா மீது தீராத காதலை பலருக்கு ஏற்படுத்தி உள்ளது.


முன்னணி நடிகர்களின் படங்கள் மீதான எதிர்பார்ப்பும், அதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் இருப்பதால் அப்படங்களுக்கான வரவேற்பும் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்கள் வசூலில் பெரிய சாதனைகளையும் படைத்துள்ளது. இவர்களின் படங்கள்  திரையரங்கிற்கு வருவதற்கு முன்பே மக்கள் மத்தியிலும், ரசிகர்களின் மத்தியிலும் ஒரு நீண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதன் பின்னர் வெளிவரும் படங்கள் ஓரிரு நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெறுகிறதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது. அதுவும் பல படங்கள் திரையங்கிற்கு வந்த ஓரிரு நாட்களிலேயே கோடியில் வசூலை அள்ளிச் சென்று விடுகிறது.  முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் பல படங்கள் கோடியில் வசூலை அள்ளியுள்ளது. குறிப்பாக தர்பார், பேட்ட, கபாலி, காலா என பல படங்கள் கோடியில் வசூல் செய்துள்ளது. இந்த  வரிசையில் பாக்ஸ் ஆபிசில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னவென்று தெரியுமா?





  • 2.0

  • கபாலி

  • எந்திரன்

  • விக்ரம் ஆகிய  படங்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது.


குறிப்பாக அதேபோல 2016-ம் ஆண்டு வெளியான நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித் முதல் முறையாக இணைந்த கபாலி படமும் 300 கோடி வசூலை தாண்டியது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 இல் வெளியான 2.0 திரைப்படம் உலக  அளவில் வசூல் சாதனை படைத்தது, 540 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்தம் பாக்ஸ் ஆபிசில் 750 கோடியை தாண்டியது


கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ரஜினி ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். எந்திரன் இந்திய அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 


அடுத்தடுத்து வசூலில் தொடர் சாதனை படைத்து வந்த நிலையில் தற்போது உலக  நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான விக்ரம் படம் மூலம் தான் ஒரு பாக்ஸ்ஆபீஸ் கிங் என்பதை கமல் மீண்டும் நிரூபித்துள்ளார். தற்போது வரை விக்ரம் படம் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும நாட்களில் விக்ரம் மேலும் வசூல் சாதனை படைக்க உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.