கொரோனா தொற்றின் தாக்கத்தினால் மலையாள முன்னணி நடிகரான மோகன்லாலின் 5 திரைப்படங்கள் ஒடிடியில் வெளியாகவுள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று பல்வேறு துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சினிமாத்துறையில் மாறுபட்டப் பாதையில் சென்று முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழிகளில் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் திரைக்கு வந்தது என்றாலே ரசிகர்களுக்குத் திருவிழாக்கோலம் தான். பால் அபிசேகம், ஆட்டம், பாட்டம் என திரையரங்கினையே அதிர செய்துவிடுவார்கள். ஆனால் கொரோனா அத்தனையும் மாற்றிவிட்டது. தற்போது உலகம் முழுவதும் ஏகப்பட்ட நடிகை, நடிகர்கள் ஒடிடி தளங்களில் தங்களின் புதிய படங்களை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குறிப்பாக தமிழ் சினிமாவில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், சூர்யாவின் சூரரைப் போற்று உள்ளிட்ட படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப்பெற்றுதந்தது. அந்த வரிசையில் இந்தாண்டு நெற்றிக்கண், சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம் வரை ஒடிடியில் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து வருகின்றன.
இந்நிலையில் தான் தமிழில் சூர்யா, தனுஷ், ஆர்யா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வெற்றிப்பெற்றுவரும் நிலையில்,அதன் ஒரு பகுதியாக மலையாள முன்னணி நடிகருமான மோகன்லால் தனது 5 படங்களை ஒடிடியில் ரீலிஸ் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனால் ஒடிடியின் நாயகனாகவே மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இதுக்குறித்து ஆசிர்வாத் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தெரிவிக்கையில், மோகன்லாலின் Bro Daddy, 12th Man, Alone உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் வெளியிடப்பட்ட 21 நாள்கள் கழித்து ஓடிடியில் வெளியிட அனுமதி வேண்டும் என்ற கோரிக்கையை 80 தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமே ஏற்றுக்கொண்டதாகவும் மற்றவர்கள் இதனை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தியேட்டரில் இனி படங்களை வெளியிடவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மோகன்லாலும் ஒடிடி திரைப்படங்களும்:
இந்த ஆண்டு தொடக்கத்தில் மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் 2 வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து மிகவும் தைரியமாக மலையாளத்தின் முன்னணி நடிகர்களான பிருத்விராஜ், பக்த் பாசில் உள்ளிட்ட பலரது படங்களும் ஒடிடியில் வெளியிட ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தற்போது மோகன்லாலில் பிரம்மாண்ட திரைப்படமான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் திரைப்படமும் ஒடிடியில் வெளியாகியுள்ளது. இதுப்போன்ற பிரம்மாண்ட படங்களை தியேட்டரில் வெளியிடாமல் ஒடிடியில் வெளியாகவுள்ளது என்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த படம் மட்டுமில்லாமல், மோகன்லாலின் Bro Daddy, 12th Man, Alone மற்றும் ஒரு படமும் திரைக்கு வராமல் நேரடியாக ஒடிடியிலேயே வெளியாகவுள்ளது. முன்பெல்லாம் சிறு பட்ஜெட் படங்கள் தான் ஆன்லைனில் வெளியாகும் நிலையில், பெரிய பட்ஜெட் படங்களும் தற்போது வெளியாகி மிகுந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படியே சென்றுக்கொண்டிருந்தால் இனி திரையரங்கு பக்கமே மக்கள் செல்ல முடியாத நிலை தான் ஏற்படும் என்பது நிதர்சன உண்மையாக உள்ளது.